இ-ஆதார் அட்டை பதிவிறக்கம்: மின்னனு ஆதார் அட்டையில் உள்ள 10 புதிய அம்சங்கள்
E-Aadhaar download, password: இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் புகைப்படம் சற்று பெரிதாக இடம்பெற்றிருக்கும். பெரிய புகைப்படம் மூலமாக அந்த தனிநபரை சிறந்த முறையில் பார்க்க முடியும்.
E-Aadhaar download, password: இ ஆதாரில் ஆதார் உடமையாளரின் புகைப்படம் சற்று பெரிதாக இடம்பெற்றிருக்கும். பெரிய புகைப்படம் மூலமாக அந்த தனிநபரை சிறந்த முறையில் பார்க்க முடியும்.
E-Aadhaar Card download: மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, சிறந்த தரமான படம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இவை தான் புதிய பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது இ ஆதார் அட்டையில் உள்ள முக்கிய அம்சங்கள். இந்திய தனித்துவ அடைபாள ஆணையம் -யுஐடிஏஐ (Unique Identification Authority of India UIDAI) 12 இலக்க ஆதார் அட்டையை வெளியிடுகிறது. இ-ஆதார் என்பது அடிப்படையில் உங்களது ஆதார் அட்டையின் மின்னணு வடிவம். மக்கள் தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை (demographic and biometric) சேகரித்து எளிய சரிபார்ப்புக்கு பிறகு இந்திய குடிமகன்களுக்கு யுஐடிஏஐ ஆல் இது வழங்கப்படுகிறது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை மக்கள் தொகை விவரங்கள். அதே போல் பத்து விரல் அடையாளங்கள், முக புகைபடம் (facial photograph) மற்றும் இரண்டு கண் கருவிழிப் படலம் (two iris scans) ஆகியவை பயோமெட்ரிக் தகவல்களாகும்.
Advertisment
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...