பி.எஃப். பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள் !

கணக்கு புதுப்பிக்கப்பட்டாலன்றி கடன் பெறவோ அல்லது ஒரு பகுதியாகப் பணத்தை திரும்ப பெறவோ முடியாது

pf employer login
pf employer login

Employee Provident Fund facts you should know : PPF என்பது, மாத சம்பளம் பெறுபவர்கள் தங்களின் வருங்கால தேவைக்காகவும், முதுமைக் காலத்தின் தேவைக்காகவும் தம் பணத்தை சேமித்து வைக்கும் ஒரு திட்டம். இந்த திட்டத்தை மத்திய அரசு 1968ம் ஆண்டு கொண்டு வந்தது.

Employee Provident Fund facts

1. இந்த திட்டத்தில், இந்த திட்டம் தொடங்கப்பட்ட 7 வது வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் பகுதியாகப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

2. ஐந்து நிதியாண்டுகளை நிறைவு செய்து மற்றும் மருத்துவச் சிகிச்சை போன்றவற்றை நோக்கிய சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே முதிர்வடைவற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும்.

3. PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் முதிர்வடைந்த ஒரு வருட காலத்திற்குள் மேற்கொண்டு 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம்.

4.PPF சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சத் தொகையான ரூ. 500 ஐ செலுத்தத் தவறினால், அந்தக் கணக்கு நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும்.

5. ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படும் போது, PPF கணக்கு ஒரு தொடர்ச்சியான கணக்காகக் கருதப்படும்.

6. ஒருவர் அவருடைய கணக்கையோ அல்லது அவர் பாதுகாப்பாளராக இருக்கும் சிறுவரின் கணக்கையோ அந்தத் கணக்கு வைத்திருப்பவரின், அல்லது வாழ்க்கை துணைவரின் அல்லது குழந்தையின் தீவிர நோய்கள் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களின் சிகிச்சை செலவுகளுக்கு அந்தத் தொகைத் தேவைப்படும் என்கிற அடிப்படையில் தகுதியுடைய மருத்துவ அதிகாரியிடமிருந்து ஆதரவான ஆவணங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே கணக்கு முதிர்வடைவதற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும்.

7. கணக்கு புதுப்பிக்கப்பட்டாலன்றி கடன் பெறவோ அல்லது ஒரு பகுதியாகப் பணத்தை திரும்ப பெறவோ முடியாது. வாடிக்கையாளர் கணக்குடன் கூடுதலாக மற்றொரு கணக்கைத் திறக்க முடியாது.

8. PF வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சதவிகிதமாக இருக்கலாம். கடன் 36 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்படும்.

மேலும் படிக்க : பி.எஃப். கணக்கில் நாமினியை இணைப்பது எப்படி ?

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Employee provident fund facts you should know

Next Story
வங்கி கிளைக்கு செல்லாமலே செக்புக்கை வாங்ணுமா! அப்போ இதை செக் பண்ணுங்க !
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express