உங்களின் பி.எஃப். பணத்திற்கான நாமினியை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

How to Add Nominee in Your EPF Account Online : இந்த முறையில் நாமினிகளை இணைப்பதற்கு எந்த விதமான சான்றிதழ்களும் தேவையில்லை.

How to Add Nominee Details in EPF Account :  ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் பெறப்பட்டு, வருங்கால தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் சேமிப்பு பணமாகும்.

தங்களுக்கு தேவையான காலத்தில் அந்த பணத்தை ஊழியர்கள் பெற்றுக் கொள்ளுமாறும் பல்வேறு சிறப்பு வசதிகளை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான Employees’ Provident Fund Organization (EPFO) அலுவலகம் செய்து வரும்.

ஊழியர்கள் தங்களின் கணக்கில் நாமினியை எப்படி ஆன்லைன் மூலமாக இணைப்பது என்பது குறித்த விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளாது.

நாமினியை (nominee) தேர்வு செய்வதன் நோக்கம் என்ன ?

ஒவ்வொரு ஊழியரும் தங்களின் நாமினியை அதில் குறிப்பிடும் பட்சத்தில், உங்களின் மறைவிற்கு பிறகு, உங்களின் நாமினி அந்த பணத்தை பெறுவதற்கான உரிமையைப் பெறுவார். ஒன்று அல்லது இரண்டு நாமினிகளை நீங்கள் அதில் இணைக்கலாம். அவர்களுக்கு எவ்வளவு சதவீதம் பணம் தர வேண்டும் என்பதையும் நீங்கள் குறிப்பிட இயலும்.

Add Nominee in Your EPFO Account Online : எப்படி அவர்களை ஆன்லைன் மூலமாக கணக்கில் இணைப்பது ?

முதலில் யுனிவர்சல் அக்கௌண்ட் நம்பர் கொண்டு உங்களின் பி.எஃப் பக்கத்தில் லாக் இன் செய்யவும். பிறகு மேனேஜ் டேப்பை ஓப்பன் செய்யவும். அதில் E-nomination என்ற ஆப்சன் இருக்கும்.

அதில் அவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இணைத்து ஆட் ரோவை க்ளிக் செய்யவும்.

நாமினேசன் டீட்டைல்ஸ் (Nomination details) என்ற பக்கத்திற்கு சென்று, அதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் பங்கீடு செய்யப்பட்டு அளிக்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.

பின்பு e-sign – பட்டனை க்ளிக் செய்ய, உங்களுக்கு ஓ.டி.பி ஒன்று அனுப்பப்படும். அதனை உள்ளிடாக கொடுத்தால் நாமினிகள் இணைக்கப்படும்.

மேலும் படிக்க : உங்களின் பி.எஃப். பேலன்ஸை SMS மூலமாக தெரிந்து கொள்வது எப்படி ?.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close