Employee Provident Fund : ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. Provident Fund எனப்படும் இந்த நிதி, ஒவ்வொரு மாதமும் மாத சம்பளக்காரர்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பணம் சேமிக்கப்படும். வருட இறுதியில் அந்த பணத்தின் மதிப்பு அதிக அளவாக உயர்ந்திருக்கும்.
Employee Provident Fund - வட்டி விகிதம் அதிகரிப்பு
2018-2019 நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் 0.10 சதவீதம் உயர்த்தி 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது.
முன்னதாக 2017-2018 நிதி ஆண்டுப் பிஎஃப் சந்தாதார்களுக்கு 8.55 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 2018-2019 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதால் மாத சம்பள தார்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுகிறது.
2017-2018 நிதி ஆண்டில் உங்கள் பிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்திருந்தால் அந்த ஆண்டின் இறுதியில் அது 1 லட்சத்து 8 ஆயிரத்து ஐந்நூற்று ஐம்பது ரூபாயாக அதிகரித்திருக்கும்.
இதுவே இந்த நிதி ஆண்டின் இறுதியில் உங்கள் பிஎஃப் கணக்கில் லட்சம் ரூபாய் உள்ளது என்றால் 1 லட்சத்து 8 ஆயிரத்து அறுநூற்று ஐம்பது ரூபாயாக அதிகரித்திருக்கும்.
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... என்ன நீங்க தயாரா?
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் 6 கோடி மாத சம்பள தார்கள் பயன்பெறுவார்கள்.
பிஎஃப் வட்டி விகித லாபமானது நிதி ஆண்டின் இறுதி நாளில் பிஎஃப் கணக்குகளில் செலுத்தப்படுவது வழக்கமாகும்.