SBI home loan : நமக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை வாடகை வீட்டுக்காரர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீட்டினை மாற்றிக் கொண்டு செல்லும் போது ஏற்படும் பிரச்சனைகள் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியதில்லை.
பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கி சேவையினைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குப் பல வகையான நிதி சிக்கல்களுக்கு உதவும் வகையில் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன், சொத்து கடன், கல்விக் கடன் போன்றவை முக்கியமானவை.
SBI home loan வட்டி விகிதம் குறைப்பு
அதிலும் வீட்டுக் கடன் என்பது சாமானிய மக்கள் தொடங்கி அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. குறிப்பாக எந்த வங்கியிக் குறைவான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறதோ அந்த வங்கியை மக்கள் அதிகம் நாடி செல்கிறார்கள்.
அந்த வகியில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது.
தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு கடன் மீதான குறைந்தபட்ச வட்டி விகிதம் 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ கஸ்டமர்ஸ் இந்த நியூஸ் உங்களுக்கு தான்!
ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைத்து 6.25 சதவீதமான நிர்ணையித்துள்ள நிலையில் வங்கிகள் இன்னும் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
எனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகித குறைப்பை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மலிவு விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 1 சதவிகிதமாக குறைப்பு!
ஆனால் முதல் ஆளாக எஸ்பிஐ வங்கி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் பிற வங்கிகளும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.