Advertisment

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உள்ள பணியாளரா? - ரூ.6 லட்சம் வரை பலன்கள்

EPF: முன்பு, பணியாளர் இறப்பதற்கு முந்தைய தொடர் 12 மாத காலம் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும் அவரது பயன்கள் கொடுக்கப்படுவதில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPF-covered employee benefit of upto 6 lakh extended

EPF-covered employee benefit of upto 6 lakh extended

Employee Provident Fund: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உள்ள பணியாளரா? ரூபாய் 2.5 லட்சம் முதல் ரூபாய் 6 லட்சம் வரை உறுதிப்படுத்தப்பட்ட பலன்கள் கிடைக்கும். புதிய விதியை பார்க்கவும்.

Advertisment

தொழிலாளர்களின் வைப்பு இணைக்கபட்ட காப்பீடு திட்ட விதி மாற்றம் 2020 (Employees’ Deposit Linked Insurance Scheme Rule Change 2020): தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் - இபிஎப்ஒ (Employees’ Provident Fund Organisation), தொழிலாளர்களின் வைப்பு இணைக்கபட்ட காப்பீடு திட்டத்தின் படி (Employees’ Deposit Linked Insurance) குறைந்தபட்ச உத்தரவாத பயனை நீட்டிக்க முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான ஒரு முடிவு 226 ஆவது மத்திய அறங்காவலர் வாரிய (Central Board of Trustees) கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 'வாவ்' அறிவிப்பு - மீண்டும் வருகிறது ரூ.4,999 வருடாந்திர திட்டம்

இப்போது, ஒரு பணியாளர் இறப்பதற்கு முந்தைய ஆண்டு வரை பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும், அவர் பணிபுரியும் காலத்தில் இறந்தால் அந்த இறந்த பணியாளரின் பயன்கள் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.

முன்பு, பணியாளர் இறப்பதற்கு முந்தைய தொடர் 12 மாத காலம் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும் அவரது பயன்கள் கொடுக்கப்படுவதில்லை.

மத்திய அறங்காவலர் வாரியம் 2018 ல் குறைந்தபட்ச உத்தரவாத வரம்பை ரூபாய் 1.5 லட்சம் என்பதிலிருந்து ரூபாய் 2.5 லட்சமாக உயர்த்துவதற்கு முடிவு செய்தது. அதன் பின்பு 2 ஆண்டுகள் கழித்து குறைந்தபட்ச உத்தரவாத பலனை வழங்குவதற்கான ஏற்பாட்டை மாற்றுவது தொடர்பான முடிவு வந்தது.

கிஸான் கடன் அட்டை எச்சரிக்கை: காலக்கெடுவுக்கு பிறகு என்ன நடக்கும் தெரியுமா?

’பணியில் இருக்கும் போது இறந்த பணியாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச உத்தரவாத பலனான ரூபாய் 2.5 லட்சம் /3 லட்சம் வழங்கும் ஏற்பாட்டை வாரியம் பரிந்துரைத்துள்ளது. முன்பு, உறுப்பினர் இறப்பதற்கு முந்தைய மாதம் வரை தொடர்ச்சியாக 12 மாத காலம் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால் குறைந்தபட்ச உத்தரவாத பலனான ரூபாய் 2.5 லட்சம் மற்றும் அதிகபட்ச உத்தரவாத தொகையான ரூபாய் 6 லட்சம் வழங்கப்படுவதில்லை. உறுப்பினர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தாலும் தற்போது இந்த பலன்களை வழங்க வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது’ என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் மார்ச் 5 ஆம் தேதி ஒரு அறிக்கையின் மூலம் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment