Reliance Jio: ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 4,999/- க்கான வருடாந்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருகிறது. ஜீயோ வழங்கும் அனைத்து வருடாந்திர திட்டங்களும் உங்களுக்காக
ஒரு வருடாந்திர திட்டத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்கள் கைபேசி எண்ணை ரீசார்ஜ் செய்யும் சுமை குறைகிறது. அனைத்து முன்னனி தொலைபேசி ஆப்ரேட்டர்களும் தங்கள் பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர திட்டங்களை வழங்குகிறார்கள். வருடாந்திர திட்டங்களின் வரிசையில், ஜியோ கடந்த வருடம் கைவிட்ட தனது ரூபாய் 4,999/- க்கான வருடாந்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. புதிய ரூபாய் 4,999/- க்கான நீண்ட கால பிரிபெய்ட் திட்டத்தின்படி அளவில்லாத ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
எஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி - ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகள் துவக்கம்
அதே சமயம் ஜியோ அல்லாத பிற ஆப்ரேட்டர்களுடனான அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள் மட்டும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. 12,000 நிமிடங்களுக்கு கூடுதலாக பேசும் வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த புதிய ரூபாய் 4,999/- திட்டத்தின்படி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் கள் இலவசமாக கிடைக்கும் மேலும் 4G வேகத்தில் 350 GB டேட்டா வும் கிடைக்கும். மற்ற ஜியோ திட்டங்களைப் போல இந்த திட்டத்தில் தினமும் டேட்டா கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எனினும் 350 GB டேட்டா முடிந்த பிறகு வேகம் 64 Kbps என்ற அளவில் குறைந்துவிடும். ஜியோ ரூபாய் 4,999/- திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது ஜியோவில் இருந்து வரும் அதிக நாட்கள் வேலிடிட்டி உள்ள திட்டமாக அமைகிறது.
மற்ற வருடாந்திர திட்டங்கள் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஜியோ இந்த திட்டங்களுக்கான வேலிடிட்டியை 365 நாட்கள் என்பதிலிருந்து 336 நாட்கள் என சமீபத்தில் குறைத்து விட்டது.
வீட்டில் இருந்தே சேவிங்ஸ் அக்கவுண்டை ஓபன் பண்ணலாம் - எஸ்பிஐ வங்கி அசத்தல்
ரூபாய் 2,121/- ககான் பிரிபெய்ட் திட்டம்:
இந்த திட்டத்தை ஜியோ கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. முந்தைய திட்டத்தை போல இதிலும் ஜியோ - ஜியோ அழைப்புகள் அனைத்தும் இலவசம் அதே சமயம் ஜியோவில் இருந்து பிற ஆப்ரேட்டர்களுடனான அழைப்புகளுக்கு 12,000 நிமிடங்கள் மட்டுமே இலவசம். இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 GB டேட்டா 4G வேகத்தில் கிடைக்கும். மேலும் 100 எஸ்எம்எஸ் கள் இலவசமாக கிடைக்கும். திட்டத்துக்கான வேலிடிட்டி 336 நாட்கள். மேலும் ஜியோ ஆப்கள் அனைத்தையும் பார்க்கும் வசதியும் இந்த திட்டத்தின் கூடுதல் அம்சம்.