EPFO members can get upto Rs.7 lakh benefits, details here: வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை கிடைக்க கூடிய கூடிதல் நன்மை குறித்து இப்போது பார்ப்போம்.
ஏறக்குறைய ஒவ்வொரு அரசாங்க திட்டத்திலும், சில அருமையான, ஆனால் அதிகம் வெளியில் தெரியாத சிறப்பு அம்சங்கள் உள்ளது. ஆனால் அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அத்தகைய ஒரு சிறப்பு அம்சம் பணியாளர் வருங்கால வைப்பு நிதியுடன் தொடர்புடையது.
அதாவது வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் ஆயுள் காப்பீடு. ஒவ்வொரு பணியாளரும் EPF கணக்கில் ரூ. 7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறுகிறலாம், அதுவும் முற்றிலும் இலவசம். EPFO அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் கணக்கு மூலம் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த காப்பீடு பணியாளரின் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த காப்பீடு முற்றிலும் இலவசம். இதற்கு ஊழியர் எந்தப் பங்களிப்பும் செய்ய வேண்டியதில்லை.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவருடைய நாமினி ஆயுள் காப்பீட்டுத் தொகையை கோரலாம். இதற்கு ஊழியர் நாமியை நியமிக்க வேண்டும்.
EPFO உறுப்பினர்கள் ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDIL இன்சூரன்ஸ் கவர்) கீழ் ஆயுள் காப்பீடு பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், இபிஎஃப்ஓ உறுப்பினர் இறந்தால், அதிகபட்சமாக ரூ.7 லட்சம் நாமினிக்கு கிடைக்கும்.
முன்னதாக இதன் வரம்பு ரூ.3.60 லட்சமாக இருந்தது. இதையடுத்து இந்த வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. போனஸ் வரம்பு 1.5 லட்சத்தில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: உடனே இதை செய்யுங்கள்; இல்லாவிட்டால் பணம் எடுக்க முடியாது; எஸ்பிஐ எச்சரிக்கை
EPFO உறுப்பினரின் மரணம் அடைந்தால், அவரது நாமினி கடந்த ஒரு வருடத்தின் சராசரி சம்பளத்தை விட 30 மடங்கு மற்றும் போனஸுடன் 20 சதவீதம் பெறுகிறார்.
எடுத்துக்காட்டாக, ஒரு ஊழியரின் அடிப்படை வருமானம் மாதம் ரூ.15,000 என்றால். அவரது சம்பளத்தின் 30 மடங்கு 4,50,000 ரூபாய். இப்போது போனஸாக ரூ.2,50,000 இதனுடன் சேர்த்து, இந்தத் தொகை ரூ.7 லட்சமாகிறது. அதிகபட்ச காப்பீட்டுக் கோரிக்கை அளவு ரூ.7 லட்சம் ஆகும்.
EPFO உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், கணக்கின் நாமினி காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இதற்கு, காப்பீட்டு நிறுவனத்திடம் இறப்பு சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். நாமினி இல்லை என்றால், சட்டப்பூர்வ வாரிசு இந்தத் தொகையைப் பெறலாம்.
இந்த பலன், சேவையில் இருக்கும் போது PF கணக்கு வைத்திருப்பவரின் மரணம் ஏற்பட்டால் மட்டுமே EPF கணக்கில் இந்த காப்பீட்டை பெற முடியும். ஆனால், ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் மரணத்திற்கு காப்பீட்டுத் தொகையை கோர முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.