EPFO pension பிஎஃப் கணக்கு, ஆதார் கார்டு, பான் கார்டு என மூன்றிலும் பெயர் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே பிஎஃப் பணத்தை எளிதாக ஆன்லைன் மூலம் திரும்பப்பெற முடியும்.
பிஎஃப் கணக்கில் உள்ள பெயரை எப்படி மாற்றுவது என்று இங்கே விவரமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
1) ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று யூஏஎன் எண் மற்றும் கடவுச்சொல்லை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்.
2) இந்தத் தளத்தில் உள்நுழைய வேண்டும் என்றால் யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். யூஏஎன் எண்ணை மேலே குறிப்பிட்ட இணைப்பிற்குச் சென்று ஆக்டிவேட் செய்யமுடியும்.
3) யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்த பிறகு, https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ தளத்தில் உள்நுழைய வேண்டும்.4) இந்தத் தளத்தில் உள்நுழைந்த பிறகு மெனுவில் உள்ள ‘Manage>Modify Basic Details' என்பதை தேர்வு செய்யவும்.
5) இதைச் செய்யும் முன்பு உங்கள் ஆதார் எண் kyc-ல் பதிவு செய்யப்பட்டு இருக்க வெண்டும். ஆதார் கார்டில் உள்ளது போன்று தான் பெயரைத் திருத்த முடியும்.
6) திருத்தம் செய்வதற்கான பக்கத்திற்குச் சென்று, உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். கூடுதலாக பெயர், பாலினம், பிறந்த தேதி போன்றவற்றை ஆதாரில் உள்ளது போன்று பதிவு செய்ய வேண்டும். இவற்றை பதிவு செய்த பிறகு, ‘விவரங்களைப் புதுப்பிக்கவும்'(update) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
அடிக்கடி கூகுள் பே யூஸ் பண்றீங்களா? வங்கிகள் உங்களை எச்சரிக்கிறது.
7) உங்கள் பெயர் மாற்றக் கோரிக்கை நீங்கள் கடைசியாக வேலை செய்த நிறுவனம் அல்லது தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். அவர்கள் அதற்கு அனுமதி அளித்த உடன் உங்கள் பிஎஃப் கணக்கு இருக்கும் கிளை அலுவலகம் அனுமதி அளிக்கும். அதன் பின்பு பிஎஃப் கணக்கில் ஆதார் கார்டில் உள்ளது போன்று பெயர் மாற்றம் செய்யப்படும்.