சம்பளதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு முக்கியமான ஓய்வூதிய திட்டமிடல் மட்டுமல்லாமல் வரி சேமிப்புக்கும் உதவும் ஒரு வசதி. பாதுகாப்பு என்பது போக, அதில் பங்களிப்பு செய்யும் ஊழியர்கள் அதிலிருந்து ஒரு பங்கு தொகையை திருமணத்துக்கோ, வீடு கட்டவோ அல்லது வீடு வாங்கவோ அல்லது வேறு எதாவது செலவுக்கோ எடுத்துக் கொள்ளும் வசதியை இது வழங்குகிறது. ஆனால் இந்த வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு, பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் விதிகள் மற்றும் வேலைக்கு அமர்த்துபவரின் பங்களிப்பு குறித்து பல தவறான தகவல்கள் அதுவும் குறிப்பாக இளம் தலைமுறை ஊழியர்களிடம் உள்ளது.
இதெல்லாம் அவங்க ஃபர்ஸ்ட் படம் இல்ல – விபரம் உள்ளே
அதில் ஒரு பொதுவான சந்தேகம் என்பது வருங்கால வைப்பு நிதி தொகைக்கு, வேலைக்கு அமர்த்துபவரின் பங்களிப்பு குறித்தது. ஊழியர்கள் பங்களிப்பு செய்வதை போல வேலைக்கு அமர்த்துபவரின் பங்களிப்புக்காக ஒரு தொகை தங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என சில ஊழியர்கள் தவறாக நம்புகின்றனர்.
வேலைக்கு அமர்த்துபவர் இதை செய்ய முடியுமா என்றால் அதற்கான பதில் முடியாது. வேலைக்கு அமர்த்துபவர் பங்களிப்பு செய்ய வேண்டிய தொகையை, உறுப்பினர் அல்லது ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய முடியாது என ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்ட விதிகள் தெளிவாக கூறுகின்றன. வேலைக்கு அமர்த்துபவர் எந்த சூழ்நிலையிலும் இந்த தொகையை ஊழியரின் சம்பளத்தில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்ள (recover) முடியாது என்பது தான் இதற்கான அர்த்தம்.
இப்படிதான் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் கணக்கிடப்படுகின்றன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவிகிதம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை சேர்த்து ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.
டெல்லி இந்திராகாந்தி ஏர்போர்ட்டுக்குப் போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கங்க
இதற்கு இணையன ஒரு தொகை வேலைக்கு அமர்த்துபவராலும் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். வேலைக்கு அமர்த்துபவரின் பங்களிப்பில் இருந்து 8.33 சதவிகித தொகை ஊழியரின் ஓய்வூதிய திட்டத்துக்கும் மீதி தொகை வேலைக்கு அமர்த்துபவரின் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கும் சென்று விடும்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க Provident Fund contribution: Can employer deduct his share from your salary?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.