டெல்லி இந்திராகாந்தி ஏர்போர்ட்டுக்குப் போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கங்க

தில்லி விமான நிலையத்தையும் தேசிய நெடுஞ்சாலை 8 (NH-8) ஐயும் இணைக்கும் ஒரு இணைப்புச் சாலை கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் ஒரு வருட காலத்துக்கு மூடப்பட்டுள்ளது.

IGI-AIRPORT
IGI-AIRPORT

புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் ஏறப் போகிறீர்களா. அப்படியானால் இந்த முக்கியமான தகவலை கண்டிப்பாக படியுங்கள்.

‘லேட் பிக்கப்’ இந்தியா; கிளைமேக்ஸில் ஏமாந்த நியூஸி., – இரண்டாம் நாள் ‘குட்டிக் கதை’

விமானங்களை தவறவிடுவதிலிருந்து தப்பிக்க தில்லி விமான நிலையத்துக்கு செல்லும் விமான பயணிகள் கூடுதலாக 10 அல்லது 15 நிமிடங்களுக்கு முன்பே சென்று விட வேண்டும். தில்லி விமான நிலையத்தையும் தேசிய நெடுஞ்சாலை 8 (NH-8) ஐயும் இணைக்கும் ஒரு இணைப்புச் சாலை கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் ஒரு வருட காலத்துக்கு மூடப்பட்டுள்ளது. தில்லி விமான நிலையத்தின் mega Phase 3A விரிவாக்கத் திட்டத்தின் படி கிழக்கு வாடகை கார் குறுக்கு வழி (Eastern Cross Taxiway) கட்டுவதற்காக இந்த இணைப்பு சாலை மூடப்பட்டுள்ளது. எனினும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளின் வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை 8 (NH8) ல் உள்ள ரங்காபுரி (Rangpuri) மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் விதமாக ஒரு 6 வழி இரட்டை பாதை சாலை (6 lane dual carriage road) GMR தலைமையிலான தில்லி சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (Delhi International Airport Limited DIAL) நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது.

தில்லி போக்குவரத்து காவல்துறையினரின் தேவையான ஒப்புதலை பெற்று, விமான பயணிகளுக்கு ஒரு போக்குவரத்து திட்டத்தை DIAL வெளியிட்டுள்ளது. அந்த திட்டத்தின்படி, ரங்காபுரி ரவுண்டானா பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் Central Spine Road வழியாக திருப்பி விடப்படும். இந்த Central Spine Road, தில்லி விமான நிலைய முனையம் 2 மற்றும் முனையம் 3 ஐ மகிபால்பூரில் இருந்து இணைக்கும். துவாரகா, சிவமூர்த்தி, மற்றும் குர்கான் பகுதிகளில் இருந்து விமான நிலைய முனையம் 2 மற்றும் முனையம் 3 க்கு வரும் பயணிகளுக்கு இடையூறு இல்லாத போக்குவரத்து இயக்கத்திற்காக ரேடிசன் பைபாஸ் சாலையும் கட்டப்பட்டுள்ளது.

பார்க்க அத்தனை மகிழ்ச்சி! குழந்தை போல் விளையாடும் யானை

விமான நிலையம் வரும் பயணிகளின் வசதிக்காக வேறு வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, வழிகாட்டும் பலகைகளை DIAL முக்கியமான இடங்களில் வைத்துள்ளது. இவ்வாறு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது விமான பயணிகளின் பயண நேரத்தில் குறிப்பிடதக்க எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என DIAL கூறியுள்ளது. எனினும் விமானங்களை தவரவிடுவதிலிருந்து தப்பிக்க தில்லி விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகள் கூடுதலாக 10 -15 நிமிடங்களுக்கு முன்பே வந்து விட வேண்டும் என DIAL மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனை ஆங்கிலத்தில் படிக்க – Boarding flights from Delhi IGI Airport?

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi indra gandhi airport terminal 3 terminal 2 boarding

Next Story
உ.பி. சோன்பத்ராவில் கண்டறியப்பட்ட தங்கம் எவ்வளவு? புவியியல் ஆய்வு மையம் விளக்கம்kerala gold smuggling case
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com