கால வைப்புத்தொகை என்றும் அழைக்கப்படும் வங்கி நிலையான வைப்புக்கள் (எஃப்.டி) பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாக கருதப்படுகின்றன. ஒரு நிலையான வைப்புத்தொகையின் காலம் ஏழு நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரை மாறுபடும்.
ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலப்பகுதியில் நிரந்தர வைப்புத் தொகையில், பொது மக்களுக்கு 5.75-7% வரை வட்டி விகிதங்களை எஸ்பிஐ செலுத்துகிறது. ஏழு நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான எஃப்.டி.க்களுக்கு, எஸ்பிஐ பொது மக்களுக்கு 6.4% என்ற அளவிலும், மூத்த குடிமக்களுக்கு 6.9% என்றும் வழங்குகிறது.
1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைகளில், எஸ்பிஐ முறையே 7% மற்றும் 7.5% விகிதங்களை பொது வாடிக்கையாளர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது. 2 ஆண்டுகள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான எஃப்.டி.களில், வங்கி 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டுகள் முதல் 5 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைகளில், எஸ்பிஐ வழங்கும் வட்டி விகிதம் 6.70% ஆகும். 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புகளில், வங்கி வழங்கும் வட்டி விகிதம் 6.60% ஆகும்.
கனரா வங்கி
7 நாட்கள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்புத் தொகையில் ஏழு நாட்கள் முதல் 269 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, கனரா வங்கி 6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 270 நாட்கள் முதல் ஒரு வருடம் எஃப்.டி.களுக்கு, வங்கி 6.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒன்று முதல் 2 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகையில் 6.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த எஃப்.டி.களுக்கு, வங்கி 6.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீண்ட கால வைப்புகளுக்கு (5-10 ஆண்டுகள்), கனரா வங்கி 6% வட்டி விகிதத்தை வழங்குகிறது.