sbi personal loan state bank of india green car loan - இந்தியாவின் முதன் முதலாக - எஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய லோன் ஆஃபர்
State Bank Of India Personal Loans: அவசர காலத்தில் எஸ்பிஐ வங்கியிடம் கடன் பெற்று பயன் பெற உங்களுக்கு சில ஆலோசனைகள் இங்கே,
Advertisment
1. கல்விக் கடன்:
எஸ்பிஐ வங்கி மாணவர் கடன், ஸ்காலர் லோன் மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான கடன் போன்றவற்றையும் அளிக்கிறது. ஸ்காலர் கடன் என்பது ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எயிம்ஸ் போன்ற பிரீமியம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாகும்.
கல்வி கடனைப் பொருத்தவரையில் 20 லட்சம் ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
சொந்தமாக வீட்டை வாங்க, பழைய வீட்டை சீரமைக்க மற்றும் ஏற்கனவே உள்ள வீடு மீது வீட்டுக் கடன் பெற முடியும் . எஸ்பிஐ வீட்டு கடன் திட்டம் மூலமாகக் கடன் பெறும் போது 8.35 முதல் 8.50 சதவீதம் வரை கடன் பெறலாம்.
3. கார் லோன்:
வாகன கடன் கீழ் புதிய கார் வாங்குபவர்களுக்குக் கடன் அளிக்கப்படுகிறது. இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து பயண வாகனங்கள், மல்டி யூடிலிட்டி வாகனங்கள் எஸ்யூவி என அனைத்து கார்களுக்குக் கடன் பெற முடியும். ஒவர் டிராப்ட் வசதியும் பெற முடியும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்தியா முதன் முதலாக Green Car Loan வழங்கவுள்ளதாக எஸ்பிஐ தற்போது அறிவித்துள்ளது.
தனிநபர்கள் சொத்துக்கள் மீது எஸ்பிஐ வங்கி கடன் அளிக்கிறது. எஸ்பிஐ வங்கி குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் எதிரான கடனை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.
கடன் தேவைப்படும் போது எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் தனிநபர் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது. மாத வருவாயில் 12 மடங்கு வரை தனிநபர் கடனாக எஸ்பிஐ வங்கி அளிக்கிறது.