வாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான ‘Yes Bank’ கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால், ஆன்லைன் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எஸ் பேங்க்கினை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், தனியார் வங்கியான ‘எஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
புதுப்பிக்கப்பட்ட தங்க ரதம் ரயில் – டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் எஸ் வங்கி ரூ.10,206 கோடிக்கு மேல் கடன் அளித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்கள் திவால் நிலையில் உள்ளன. இதனால் எஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது.
தற்போது எஸ்பிஐ மற்றும் எல்ஐசி கூட்டமைப்பு எஸ் வங்கியின் பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. தற்போது எஸ் வங்கியின் கடன் சுமை ரூ.14,700 கோடியாக உள்ளது. இது வங்கியின் சொத்து மதிப்பில் 54.5% ஆகும். மேலும் எஸ் வங்கியை காக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சகமும் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளேன். இந்த விவகாரத்தை மத்திய வங்கி முழுமையாக டேக் ஓவர் செய்து, விரைவில் பிரச்சனைகளை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளது. ஒவ்வொரு வைப்பாளரின் பணமும் பாதுகாப்பாக இருக்கும் என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அவர்களின் பணம் பாதுகாப்பானது.
வீட்டுமனைகளில் அதிகம் முதலீடு செய்யும் மக்கள்! பங்கு சந்தைகளுக்கு இரண்டாம் இடம்!
எந்தவொரு வைப்புத் தொகையாளருக்கும் எந்த இழப்பும் ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் எனக்கு உறுதியளித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்றும் அரசு இரண்டும் எஸ் வங்கியின் சிக்கலை தீவிரமாக கண்காணித்து வருகின்றன” என்றார்.
உடனடி தீர்வாக, எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ .50,000 பணத்தை திரும்பப் பெற முடியும் என்பதை உறுதி செய்கிறோம். இந்த பிரச்சனையின் ஆரம்ப தீர்வுக்கு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருவதாகவும், வைப்புத்தொகையாளர்கள், வங்கி மற்றும் பொருளாதாரத்தின் நலன்களை மனதில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.