Fixed Deposit: 5 things to know before you open an FD account: பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு வங்கி நிலையான வைப்புக்கள் (ஃபிக்ஸிட் டெபாசிட்கள்) ஒரு பிரபலமான சேமிப்பு விருப்பமாக உள்ளது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மற்றும் தங்களுடைய முதலீட்டில் நிலையான வருமானம் பெற விரும்புபவர்கள், தங்களுடைய பணத்தை வங்கி டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். வங்கிகள் வெவ்வேறு காலக்கட்டங்களுக்கு ஏற்ப வைப்புத்தொகை திட்டங்களை வழங்குகின்றன, எனவே கால அளவைப் பொறுத்து, முதலீட்டாளர்கள் 15 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD கணக்கைத் திறக்கலாம்.
உங்கள் பணத்தை வங்கி FD இல் போடுவதற்கு முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
ஃபிக்ஸிட் டெபாசிட்களில் எப்படி லேடரிங் செய்வது? ஏன் செய்ய வேண்டும்?
இன்னும் சில நாட்களில் வங்கியில் ஃபிக்ஸிட் டெபாசிட்களில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கான முக்கியமான செய்தி இதோ. சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் FD வட்டி விகிதங்களை மேல்நோக்கி திருத்தத் (அதிகரிக்க) தொடங்கியுள்ளன. பணவீக்க சூழலில், பொருளாதாரத்தில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் மற்றும் சில மாதங்களில் அதிக வங்கிகள் தங்கள் FD களில் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நீங்கள் உங்கள் நிதியை 'லேடரிங்' அணுகுமுறை மூலம் முதலீடு செய்யலாம் அல்லது அதிகபட்சமாக குறுகிய முதல் நடுத்தர கால வைப்புகளில் வைக்கலாம். 'லேடரிங்' என்பதன் கீழ், குறுகிய கால FD முதிர்ச்சியடையும் போது, உங்கள் தேவையின் அடிப்படையில் நீண்ட காலத்திற்கு மீண்டும் முதலீடு செய்யுங்கள்.
குறைந்த பயனுள்ள வருமானம்
நீங்கள் 30 சதவீத வருமான வரி செலுத்தும் மிக உயர்ந்த வரி வரம்பில் இருந்தால், வங்கி FD இல் உள்ள வரிக்கு பிந்தைய வருமானம் உங்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும். வங்கி ஃபிக்ஸிட் டெபாசிட்களில் பெறப்படும் வட்டி ஒருவரது வருமான வரி அடுக்கின்படி வரிக்கு உட்பட்டது. வட்டி வருமானத்தின் அளவு 'பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானத்தில்' சேர்க்கப்பட்டு பின்னர் வரி விதிக்கப்படும். பெரும்பாலான வங்கிகள் சுமார் 6.5 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகின்றன மற்றும் வரி விலக்கு மற்றும் பணவீக்கத்தை சரிசெய்த பிறகு, பயனுள்ள வருமானம் கிட்டத்தட்ட குறைவாக உள்ளது. மூலதனத்தைப் பாதுகாப்பதற்கு FD சிறந்தது, ஆனால் செல்வத்தை உருவாக்குவதற்கு அல்ல.
சிறப்பு வைப்புத்தொகை
சில சமயங்களில், வங்கிகள் 444 நாட்கள் அல்லது 650 நாட்கள் அல்லது 888 நாட்கள் என்ற குறிப்பிட்ட காலத்திற்கான சிறப்பு வைப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளன. இத்தகைய வைப்புகளுக்கு, வங்கிகள் பொதுவாக அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. அவற்றைத் தேர்ந்தெடுப்பது, சில கூடுதல் நாட்களுக்கு நிதியை சேமித்து வைப்பதன் மூலம் அதிக விகிதத்தை உங்களுக்கு வழங்குகிறது.
இதையும் படியுங்கள்: PPF, SSY, NPS முதலீட்டாளர்கள் கவனத்திற்கு; கணக்கு முடக்கப்படுவதை தடுக்க மார்ச் 31க்குள் இது முக்கியம்!
ஸ்வீப்-இன் FD
FD ஒரு லாக்-இன் (குறிப்பிட்ட காலக்கெடுவுடன்) காலத்துடன் வருகிறது மற்றும் தேவைப்படும் நேரத்தில், பணத்தைப் பெற நீங்கள் வைப்புத்தொகையை முன்கூட்டியே கணக்கை மூட வேண்டும். அதற்குப் பதிலாக, நீங்கள் அதிக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வங்கிகளில் ஸ்வீப்-இன் FD திட்டங்களைத் தேர்வுசெய்யவும். இதன் மூலம் நீங்கள் FD வட்டி விகிதங்களைத் தொடர்ந்து அனுபவிக்கலாம்.
சிறு நிதி வங்கிகளின் FD திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
முன்னணி வங்கிகளைப் போலவே, சிறு நிதி வங்கிகளின் FD திட்டங்கள் உள்ளன, அவை பொதுவாக அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மற்ற வணிக வங்கிகளைப் போலவே சிறு நிதி வங்கிகளும் ஒரு வங்கியில் ஒரு டெபாசிட்டருக்கு ரூ. 5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை எடுத்துக் கொள்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.