Advertisment

அசைக்க முடியா அம்பானி; ஆளுமை செலுத்தும் தமிழர்கள் - ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் 2020

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Forbes Billionaires list 2020 Mukesh Ambani retains top slot few tamilians in list including kalanidhi maran - ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் 2020

Forbes Billionaires list 2020 Mukesh Ambani retains top slot few tamilians in list including kalanidhi maran - ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் 2020

Forbes Billionaires list 2020: உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக, உலக சந்தைகள் சிவப்பு நிறத்தில் இருப்பதால், இந்த ஆண்டின் பில்லியனர்களின் மொத்த சொத்து எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கபப்ட்டுள்ளது.. இதன் விளைவாக, ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் 2020 இன் படி, இந்த ஆண்டு மொத்த பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு $8 டிரில்லியன் ஆகும், இது 2020ல் 8.7 டிரில்லியன் டாலராக இருந்தது.

Advertisment

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் நுகர்வோர் தேவை குறைந்து வருவதால் இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மொத்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 2019 ல் 106 ஆக இருந்த நிலையில், தற்போது 102 ஆக குறைந்துள்ளது. அவர்களின் கூட்டு நிகர மதிப்பு 23 சதவீதம் குறைந்து 313 பில்லியன் டாலராக உள்ளது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

வாசற்படியை தாண்ட வேண்டாம்... முக்கால் மணி நேரத்தில் கடன்: எஸ்பிஐ அதிரடி

அதேசமயம், முன்னாள் கணித ஆசிரியரும், எடெக் நிறுவனத்தின் BYJU இன் நிறுவனருமான பைஜு ரவீந்திரன் போன்ற சிலர், உலகளாவிய பணக்காரர்களின் பட்டியலில் முதல்முறையாக இடம் பிடித்துள்ளனர். 1.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், ரவீந்திரன் இந்தியாவின் மிக இளவயது கோடீஸ்வரராக இடம் பிடித்துள்ளார். பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் சீனாவின் டென்சென்ட் அதன் முதலீட்டாளர்களில் சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி 36.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார், அதைத் தொடர்ந்து சில்லறை வர்த்தகரும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (டிமார்ட் சூப்பர் மார்க்கெட்டுகள் சங்கிலி) நிறுவனருமான ராதாகிஷன் தமானி 13.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார். எச்.சி.எல் குழுமத்தின் இணை நிறுவனர் சிவ் நாடார் 11.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

ஆசியா-பசிபிக் பகுதியைப் பொருத்தவரை, உலகின் மிகப் பெரிய பில்லியனர்கள் எண்ணிக்கை 778 ஆகவும், அமெரிக்காவில் 614 ஆகவும், ஐரோப்பாவில் 511 ஆகவும் உள்ளது. நாடு வாரியாக, அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா முன்னணியில் உள்ளது கடந்த ஆண்டு 607 ஆக இதன் எண்ணிக்கை இருந்தது. சீனா 389 பில்லியனர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2019 ல் எண்ணிக்கை 324 ஆக இருந்தது, ஜெர்மனி 107, இந்தியா 102, ரஷ்யா 99 என்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

4 மணி வரை வங்கிகள் செயல்படும்: ஆனால் ஈஸியாக பணம் எடுக்க முடியாது

தமிழக பில்லியனர்கள்

இந்திய பில்லியனர்கள் பட்டியலில் தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர். $1.6 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட கலாநிதி மாறனுக்கு சன் டிவி நெட்வொர்க் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களை இயக்குகிறது. இந்தியா முழுவதும் எஃப்எம் பன்பலையை ஒளிபரப்புகிறது. ஐபிஎல்-லின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் உரிமையை கொண்டுள்ளது.

எச்.சி.எல் குழுமத்தின் இணை நிறுவனர் சிவ் நாடார் 11.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜிஆர்டி தங்க நகைக் கடையின் நிறுவனர் ஜி. ராஜேந்திரன் $1.5 பில்லியன் சொத்து மதிப்புடன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

Zoho secure நிறுவனத்தின் நிறுவனர் ராதா வேம்பு $1.2 பில்லியனுடன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Forbes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment