Gold Rate News: குளிர்காலத்தில் தினம் இழுத்துப் போர்த்தி தூங்கும் நமக்கு, போர்வை வழியாக உள்ளங்காலுக்குள் ஊடுருவி, உச்சந்தலையின் கூந்தலை சூடு பறக்க நட்டுக்க வைக்கும் செய்தி இது.
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,280 அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து கச்சா எண்ணை விலை அதிகரித்தது.
இன்றைய தமிழக செய்திகளின் சமீபத்திய அப்டேட்டுகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதை தொடர்ந்து தற்போது தங்கம் விலையும் உயர்ந்து வருகிறது.
சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து ரூ.3,896க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.512 விலை உயர்ந்து, ரூ.31,168க்கு விற்பனையானது.
Gold Rate: தங்கம் விலை உயர்வுக்கான காரணம்?
தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து, மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது,
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாலும், தொடர்ந்து உலக பொருளாதாரம் மந்த நிலை நீடிப்பதால், பொருளாதார துறை சார்ந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டு, தங்கத்தின் மீது முதலீடு செய்வதாலும் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இந்த விலை உயர்வு மார்ச் மாதம் வரை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
Tamil Nadu assembly today live updates - லேட்டஸ்ட் அப்டேட்டுகள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.