2019ம் ஆண்டில் தொழிலாளர்களுக்காக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

PPF, NSC, and other small savings schemes : டிசம்பர் 10, 2019 வரை சுமார் 20  ஆயிரம் நபர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில்...

New Pension, Savings Schemes 2020  :  2019ம் ஆண்டு பி.எஃப். வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது அரசு. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம்.  லேபர் & எம்ப்ளாய்மெண்ட் அமைச்சகம் ஷ்ராம் சுவிதா போர்டல் என்ற இணையத்தை உருவாக்கி, கணக்காளர்கள் மிகவும் எளிமையான வகையில் அனைத்தையும் பயன்படுத்த வழி வகை செய்தது.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !

Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) என்ற பெயரில் முறைசாரா, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது மத்திய அரசு. மாதம் சம்பளமாக ரூ. 15 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் பெரும் நபர்களுக்கு, வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 60 வயதில் இருந்து மாதம் ரூ. 3000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

EPFO/ESIC/NPS/PM-SYM திட்டங்களில் இல்லாத வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. டிசம்பர் 10, 2019 வரை சுமார் 20  ஆயிரம் நபர்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் படிக்க : இந்த ஆண்டில் ஸ்மார்ட்போன் உலகை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்!

பி.எஃப் கணக்காளர்களுக்கான மாற்றங்கள்

ஆன்லைன் மூலமாகவே கணக்காளர்கள் தங்கள் பி.எஃப் கணக்கிற்கான யுனிவர்செல் அக்கௌண்ட் நம்பரை ஜெனரேட் செய்து கொள்ளலாம். பி.எஃப் பணத்திற்கான வட்டி விகிதமானது 8.65%மாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஓய்வூதிய கணக்கர்களுக்கும் பயன்படும் வகையில் எலக்ட்ரானிக்ஸ் பிபிஓவை அறிமுகம் செய்தது. எம்ப்ளாயர்கள் பிஸினஸை க்ளோஸ் செய்வது மற்றும் கட்டப்படாத தவணைகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவது போன்றவற்றை மேற்கொள்ள இ – இன்ஸ்பெக்சன் கொண்டு வரப்பட்டது.

ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம்

15 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியத்தை திரும்ப பெறுவதற்கான உரிமையை வழங்கும் பொருட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 6.3 லட்சம் பேர் பயனடைவார்கள்.

5 கோடி சந்தாதாரர்களுக்கும், லட்சக்கணக்கான முதலாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவாகவும் சுமூகமாகவும் குறைகளைத் தீர்ப்பதற்காகவும் EPFIGMS- ல் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

ESI Schemes

ESI கார்ப்பரேஷன் ESI திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகளால் செலுத்தப்படும் ESI பங்களிப்பு விகிதங்களை 6.5% (ஊழியர்களின் பங்கு 1.75% மற்றும் முதலாளிகளின் பங்கு 4.75%) முதல் 4% ஆக குறைத்தது (ஊழியர்களின் பங்கு 0.75% மற்றும் முதலாளிகளின் பங்கு 3.25%) 01.07.2019 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close