சத்தீஸ்கரில் செயல்பட்டுவரும் மகாதேவ் ஆப் உள்பட 21 சட்டவிரோத பெட்டிங் செயலிகளை முடக்க அமலாக்கத்துறை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.
அதனடிப்படையில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மகாதேவ் ஆப் உள்பட 21 பெட்டிங் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கரில் மகாதேவ் செயலி பேசுபொருளாகி உள்ளது. மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபையில் 20 இடங்களுக்கு முதல் கட்டமாக நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் மற்றும் சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும். மிசோரம் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 17 டிசம்பர் 2023 அன்று முடிவடைகிறது, அதே சமயம் சத்தீஸ்கர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 3 ஜனவரி 2024 அன்று முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆன்லைன் செயலி நிறுவனத்திடம் ரூ.500 கோடி பெற்ற முதலமைச்சர்: அமலாக்கத் துறை அறிக்கை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“