மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலருக்கும் அதற்கான சிறந்த வங்கி எது என்பது குழப்பமாகவே இருக்கும் . இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையாக பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு சிறந்த வங்கியில் எச்டிஎப்சி வங்கி அளிக்கும் சலுகைகள் குறித்து இங்கே பகிரப்பட்டுள்ளன
பிரபல வங்கியான எச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?
பிக்சட் டெபாசிட் திட்டத்தை பொருத்தவரையில், முதிர்வு காலத்தின் போது எவ்வளவு வட்டி விகித லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார்களோ அதில் ஒரு ரூபாய் கூடக் குறையாமல் கிடைக்கும். ஆனால் பிற சேமிப்புத் திட்டங்களில் அப்படி இல்லை.
5 வருட வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது லாபமாக வரும் வட்டி தொகைக்கு வருமான வரித் துறை வரி விலக்கு அளிக்கிறது. அதுவும் அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரையில் மட்டும் தான்.
அன்மையில் வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
எச்டிஎப்சி வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடம் முதலீடு செய்யும் போது 6.5 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. அதில் 1.50 லட்சம் ரூபாயினை 10 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது முதிர்வடையும் போது 2,85,839 ரூபாயாகத் திரும்பக் கிடைக்கும்.
dont miss it.. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்
இதுவே 5 வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் 2,14,839 ரூபாயாகக் கிடைத்திருக்கும். வருமான வரி விலக்குக் கிடைத்திருக்கும். மீண்டும் அந்த முதிர்வு தொகையினை மறு முதலீடு செய்யும் போது அதே வட்டி விகிதம் என்றால் 10 வருடத்தில் 3,07,705 ரூபாயாக லாபம் கிடைக்கும்.
எனவே பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது 5 வருடங்கள் எனப் பிரித்து முதலீடு செய்யும் போது அதிக லாபம் கிடைக்கும் என்றும், குறைந்த காலத்திற்கு அதிக லாபம் என்றும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது லாபம் குறையும்.