/tamil-ie/media/media_files/uploads/2019/03/whatsapp.-11.jpg)
state bank
hdfc interest rates : இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்துள்ள எச்டிஎப்சி வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்த தகவல்.
எச்டிஎப்சி வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் முதல் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் உயர்த்தப்படுவதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது.
எச்டிஎப்சி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் உயர்த்தியுள்ளதால் மிதவை வட்டி முறையில் வீடு கடன் பெற்றவர்களின் தவணை செலவு அதிகரிக்கும். மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது.
புதிய வட்டி விகித உயர்வின் படி எச்டிஎப்சி 8.90 முதல் 9.15 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டு கடன் போன்றவற்றை அளிக்கும். எச்டிஎப்சி கடன் திட்ட வட்டி விகித உயர்வு முடிவைப் பிற வங்கிகளும் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளது.
எச்டிஎப்சி-யில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு கடன் தற்போது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 8.90%). 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடன் தற்போது 9.10 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 9.05%).
ஐசிஐசிஐ பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு உண்மையாவே இது ஹாப்பி நியூஸ் தான்!
பொதுவாக ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டுமே வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்து. இருப்பினும் எச்டிஎப்சியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தான்.
இப்படியொரு வசதியெல்லாம் எஸ்பிஐ - யில் மட்டுமே! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.