HDFC Personal Loan interest rate : எச்டிஎப்சி வங்கி, இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று. அது தன் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் முதல் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் உயர்த்தப்படும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
எச்டிஎப்சி கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் மிதவை வட்டி முறையில் வீடு கடன் பெற்றவர்களின் தவணை செலவு அதிகரிக்கும். மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் புதிய வட்டி விகித உயர்வின் படி எச்டிஎப்சி 8.90 முதல் 9.15 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டு கடன் போன்றவற்றை அளிக்கும். எச்டிஎப்சி கடன் திட்ட வட்டி விகித உயர்வு முடிவைப் பிற வங்கிகளும் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளது.
எச்டிஎப்சி-யில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு கடன் தற்போது 8.95 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 8.90%). 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடன் தற்போது 9.10 சதவீத வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது (பெண்களுக்கு 9.05%).
பொதுவாக ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டுமே வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்து. இந்நிலையில் எச்டிஎப்சியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தான்.
மேலும் படிக்க : அடிக்கடி கூகுள் பே யூஸ் பண்றீங்களா? வங்கிகள் உங்களை எச்சரிக்கிறது.