Advertisment

வீட்டுக்கடன் வாங்க வேண்டுமா? எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி?

Latest Home Loans Interest Rates : சில வங்கிகளின் வட்டி விகிதம் சமாளித்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HDFC home loans HDFC cuts prime lending rates on home loans

HDFC home loans HDFC cuts prime lending rates on home loans

home loans interest rates of SBI, AXIS, HDFC, ICICI : ஒரு சொந்த வீடு தான் உங்களின் கனவு என்று நீங்கள் நினைத்திருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு தான். சிலருக்கு நிலம் வாங்க மட்டுமே பணம் இருக்கும். சிலருக்கு நிலம் இருந்தாலும் வீடு கட்ட தேவையான அளவுக்கு நிதி பற்றாக்குறையாக இருக்கும். அப்படி இருக்கின்ற நேரத்தில் பலரும் நாடுவது வங்கிகளைத் தான். சில வங்கிகளின் வட்டி விகிதம் நம்மாள் சமாளித்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கும். சில வங்கிகளின் வட்டி விகிதம் பார்த்தால் இன்னும் கொஞ்சம் யோசனை செய்துவிட்டு வாங்கலாம் என்று இருக்கும். தற்போது எந்தெந்த வங்கிகளில் வட்டி விகிதங்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று கீழே காண்போம்.

Advertisment

எஸ்.பி.ஐ (SBI Home loan interest rates)

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்த வங்கியில் வீட்டுக்கடன்களுக்கு 8.05% வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் ப்ரோசசன் கட்டணமாக மொத்த வங்கிக் கடனில் 1% வசூலிக்கப்படும்.

ஆக்ஸிஸ் பேங்க் (Axis Home loan interest rates)

இந்த வங்கியும் மொத்த கடனில் 1%-த்தை ப்ரோசசன் கட்டணமாக வசூலிக்கிறது. இரண்டு விதமான வீட்டுக் கடன்களை இந்த வங்கி வழங்குகிறது. ஃப்ளோட்டிங் வட்டி முறையென்றால் 8.9% வரை ஒரு ஆண்டுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. ஃபிக்ஸட் இண்ட்ரெஸ்ட் முறை என்றால் 12% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

எச்.டி.எஃப்.சி (HDFC Bank home loan interest rates)

வீட்டுக்கடன்களுக்கு இந்த வங்கி 8.5% வட்டியை வசூலிக்கிறது. இதற்கான ப்ரோசசிங் கட்டணம் மொத்த வங்கிக் கடனில் 0.5% என்ற அளவில் வசூலிக்கப்படும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI bank home loan interest rates)

வீட்டுக்கடனுக்கான வட்டி 8.60% ஆகும். ப்ரோசசன் கட்டணம் 0.5% முதல் 1% வரை இருக்கும்.

சிட்டி பேங்க் (Citibank home loan interest rates)

8.5% மேல் வட்டி வசூலிக்கப்படும். மேலும் ப்ரோசசன் சார்ஜ் 5 ஆயிரம் முதல், கடனின் தேவைக்கு ஏற்ப மாறுபடும்.

கோட்டாக் மகிந்த்ரா வங்கி (Kotak Mahindra Bank home loan interest rates)

இந்த வங்கி 8.9% வரை வட்டி வசூலிக்கிறது. ப்ரோசசன் கட்டணம் 2% ஆகும்.

இதர வங்கிகள்

ஸ்டாண்டர்ட் சார்டெர்ட் பேங்கில் வீட்டுக்கடனுக்கான வட்டி 9.41% ஆகும். பேங்க் ஆஃப் பரோடாவில் 8.45% முதல் 13% வரை. யெஸ் பேங்கில் வீட்டுக்கடனுக்கான வட்டி 12% வரை வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க : பிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா? பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக!

Icici Bank Axis Bank Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment