எஸ்பிஐ ஏடிஎம் டெபிட் கார்டை எஸ்எம்எஸ் மூலம் பிளாக் செய்வது எப்படி?

SBI Updates: நீங்கள் உங்களுடைய எஸ்பிஐ ஏடிஎம் உடனான டெபிட் அட்டையை ஆப்லைன் மூலமாகவும் முடக்கலாம். அதற்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணும் உங்கள்...

How to block SBI ATM Debit Card? : நீங்கள் உங்களுடைய ஏடிஎம் உடனான டெபிட் அட்டையை தொலைக்கவோ அல்லது எங்காவது மறந்தோ வைத்து விட்டீர்களா? அது பற்றி கவலை படவோ அல்லது பீதியடையவோ வேண்டாம். மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உஙக்ளுடைய எஸ்பிஐ ஏடிஎம் அட்டையை உடனே முடக்க வேண்டும்.


நீங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு உங்கள் ஏடிஎம் அட்டையை முடக்கலாம். அல்லது எஸ்பிஐ யின் ஆன்லைன் சேவை மூலமாகவோ அல்லது எஸ்பிஐ கைபேசி ஆப் மூலமாகவோ அதை முடக்கலாம். நீங்கள் தொலைத்த அல்லது தவறவிட்ட எஸ்பிஐ ஏடிஎம் அட்டையை முடக்க இது தவிர ஒரு எளிய மற்றும் சிக்கல் இல்லாத வழியும் உள்ளது. எளிதாக நீங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் தொலைந்து போன ஏடிஎம் அட்டையை முடக்கலாம்.

கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எஸ்.பி.ஐயின் அறிவிப்பைப் பாருங்கள்!

எப்படி குறுஞ்செய்தி மூலம் ஏடிஎம் அட்டையை முடக்குவது

நீங்கள் உங்களுடைய எஸ்பிஐ ஏடிஎம் உடனான டெபிட் அட்டையை ஆப்லைன் மூலமாகவும் முடக்கலாம். அதற்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணும் உங்கள் ஏடிஎம் அட்டையின் இறுதி நான்கு இலக்கங்களும் வேண்டும்.

“BLOCK<space>XXXX” என்று ஒரு குறுஞ்செய்தியை (SMS) 567676 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.

XXXX என்பது உங்கள் தொலைந்த ஏடிஎம் அட்டையின் கடைசி நான்கு இலக்கங்களாகும்.

உங்கள் அட்டையை முடக்க நீங்கள் அனுப்பிய கோரிக்கை ஏற்கப்பட்ட உடன், உங்களுக்கு ஒரு உறுதிபடுத்துகிற குறுஞ்செய்தி நாள், நேரம் மற்றும் உங்கள் கோரிக்கை எண்ணையும் குறிப்பிட்டு வரும்.

எஸ்பிஐ அப்டேட் – 999.9 அளவு தரம் வாய்ந்த தங்கத்தை வைப்பு வைக்க திட்டம் இருக்கா? இதைப் படிங்க

மேலே குறிப்பிட்ட வசதியை பயன்படுத்த முதலில் உங்கள் கைபேசி எண் வங்கி கிளையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கைபேசி எண்ணை வங்கியில் பதிவு செய்யவில்லை என்றால் ஒரு குறுஞ்செய்தி மூலம் அதையும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

REG<space> Your Account Number என்று 09223488888 இந்த எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள். இது உங்கள் கைபேசி எண்ணை எளிதில் வங்கியில் கணக்கோடு பதிவு செய்துவிடும்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close