Advertisment

திருமணத்துக்கு பிறகு உங்கள் பெயரை ஆதார் அட்டையில் எப்படி மாற்றுவது?

Aadhaar News: உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் உங்களிடம் இல்லையென்றால் அல்லது உங்கள் கைபேசி எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) பதிவு செய்யவில்லை என்றால், offline மூலம் உங்கள் ஆதார் விவரங்களை மாற்றும் முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aadhaar card

Aadhaar Update: தனி நபர் அடையாளத்துக்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றான ஆதார் இப்போது பரவலாக நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வருமான வரியை செலுத்த ஆதார் கட்டாயமாக்கப்பட்ட சூழலில் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களும் மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாகிறது.

Advertisment

ஆனால் உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உங்கள் பெயரை மாற்ற வேண்டி இருக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள். ஏற்கனவே திருமணமான மற்றும் விரைவில் திருமணமாகப் போகும் பெண்கள் தங்கள் பெயரை ஆதார் அட்டையில் மாற்றும் வழிமுறையை தெரிந்திருக்க வேண்டும்.

ஆன்லைன் புதுப்பிப்புக்கான செயல்முறை

1. முதலில் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் சுயசேவை புதுப்பிப்பு இணைய முகப்பில் (self-service update portal) உள்ளீடு (log in) செய்துக் கொள்ளவும்.

2. உங்கள் பெயர் அல்லது குடும்ப பெயர் (surname) அல்லது இரண்டையும் சேர்த்து மாற்றுவதற்கான கோரிக்கையை தேவையான வடிவத்தில் சமர்பிக்கவும்.

3. இப்போது ஸ்கேன் செய்யப்பட்ட துணை ஆவனங்களின் (supporting documents) நகலை self-attestation செய்து பதிவேற்றவும்.

4. உங்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுசொல் (OTP) வரும். இதன் பிறகு நீங்கள் செய்த மாற்றத்தை OTP மூலம் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

5. இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

offline மூலம் ஆதார் பதிவு மையங்களில் புதுப்பிப்பு (Update) செய்வது.

1. உங்கள் பெயரை மாற்ற அருகில் உள்ள ஆதார் சேர்க்கை மையத்துக்கு செல்லவும்.

2. அசல் துணை ஆவணங்களை கையில் எடுத்துச் செல்லவும். அந்த ஆவணங்க ஸ்கேன் செய்த பிறகு உங்களிடம் திருப்பித் தரப்படும்.

3. தேவைப்பட்டால் உங்கள் biometrics ஐயும் அங்கிருந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

4. இதற்கு நீங்கள் ரூபாய் 25/- ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆதாரை புதுப்பிப்பதற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

எச்சரிக்கை! பான் - ஆதார் இணைப்பு: மார்ச் 31க்கு பிறகு அபராதம் செலுத்த நேரிடும்

உங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் உங்களிடம் இல்லையென்றால் அல்லது உங்கள் கைபேசி எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) பதிவு செய்யவில்லை என்றால், offline மூலம் உங்கள் ஆதார் விவரங்களை மாற்றும் முறையை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

முழு செயல்முறை 90 நாட்கல் எடுக்கும். நீங்கள் உங்கள் மின்னணு ஆதாரை (e-Aadhaar) UIDAI இணையதள முகவரியில் இருந்து சரிபார்ப்பு முடிந்த பிறகு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment