இணையதளம் மூலம் எஸ்பிஐ-யில் PPF கணக்கை திறப்பது எப்படி?
State Bank Of India: பிபிஎப் கணக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பெயரில் திறக்க வேண்டும் என்றால் இந்த தேர்வின் அருகில் உள்ள பெட்டியை சரிப்பார்க்கவும்.
State Bank Of India: பிபிஎப் கணக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பெயரில் திறக்க வேண்டும் என்றால் இந்த தேர்வின் அருகில் உள்ள பெட்டியை சரிப்பார்க்கவும்.
How to open PPF account in SBI from online website
SBI: முதலீட்டின் வடிவத்தில் சிறிய சேமிப்புகளைச் செய்வதற்கு மக்களை ஊக்கப்படுத்துவதும், அவர்களின் சேமிப்பில் கவர்ச்சிகரமான வருவாயைப் பெறுவதும் 1968 ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி Public Provident Fund (PPF) கணக்கின் நோக்கமாகும். இது ஒரு சேமிப்பு மற்றும் வரி சேமிப்பு முதலீடாகும். ஆண்டு வரி சேமிப்பு மட்டுமல்லாது ஒய்வுக்கு பிறகான ஒரு நிதியை உருவாக்கவும் இது அனுமதிக்கிறது. இந்திய அரசால் நிர்வகிக்கப்படுவதால் இது ஒரு பாதுகாப்பான முதலீடு. ஒரு பிபிஎப் கணக்கின் கால அளவு 15 வருடங்கள், இந்த கால அளவு முடிந்த பிறகு 5 வருடங்கள் என்ற அளவில் நீட்டிக்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூபாய் 5,00/-. கொடுக்கப்பட்ட ஒரு நிதியாண்டில் நீங்கள் அதிகப்பட்சமாக ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
Advertisment
நீங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால் ஒரு பிபிஎப் கணக்கை எளிதாக வங்கியின் இணையதள சேவையை பயன்படுத்தி திறக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி எளிதாக ஒரு பிபிஎப் கணக்கை சில நிமிடங்களில் திறக்கலாம்.
உங்கள் கணக்கு பக்கத்தில் இந்த reference number தானாகவே சேர்க்கப்படும். இந்த எண்ணை சொடுக்கியவுடன் உங்களால் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய முடியும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வங்கி கிளையில் நேரடியாக கொண்டு கொடுக்க வேண்டும். ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் KYC ஆவணங்கள் கணக்கு துவங்குவதற்கு தேவையான முக்கியமான ஆவணங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil