Advertisment

ஐசிஐசிஐ கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருக்கும் நண்பர்களே - நீங்கள் இப்படியும் ஏமாறலாம்

ICICI Updates: ஏடிஎம் இயந்திரத்தை உபயோகபடுத்தி முடித்து விட்டு செல்லும் முன்பு 'Cancel' key ஐ அழுத்தவும். மேலும் உங்கள் ஏடிஎம் அட்டை மற்றும் பரிவர்த்தனை ரசீதை எடுத்து செல்ல மறந்துவிடாதீர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ICICI Bank ATM credit, debit card holders all need to know

ICICI Bank ATM credit, debit card holders all need to know

ICICI Bank ATM: நீங்கள் கடன் அட்டை அல்லது டெபிட் அட்டை பயன்படுத்துகிறீர்களா? இதை கண்டிப்பாக செய்யுங்கள் இல்லை என்றால் card cloning, skimming scams போன்ற மோசடிகளுக்கு நீங்கள் இரையாகிவிடுவீர்கள்

Advertisment

ஐசிஐசிஐ ஏடிஎம் பாதுகாப்பு குறிப்புகள்: ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் டெபிட் அட்டை மற்றும் கடன் அட்டை பயன்படுத்தும் அனைவரும் ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும். பணம் எடுக்கும்போது அல்லது வேறு பரிவர்த்தனைகள் செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் ஏனேன்றால் உங்கள் பணத்தை திருட உங்களை சுற்றி திருடர்கள் இருக்கலாம். ஐசிஐசிஐ வங்கி சில குறிப்புகளை வழங்குகிறது அதன் மூலம் உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் ஏடிஎம் டெபிட் அல்லது கடன் அட்டை மோசடிகாரர்களால் card cloning மற்றும் skimming போன்ற அச்சுருத்தல்களுக்கு ஆளாக நேரிடும். அந்த மாதிரியான அச்சுருத்தல்களுக்கு எதிராக மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்ட EMV chips கொண்ட அட்டைகளாக இருந்த போதும், சமீபத்தில் 25 ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை skimming காரணமாக இழந்துள்ளனர்.

நில ஆவணங்களை ஆன்லைனில் தருவதன் மூலம் எளிதாகும் விற்பனை

உங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை உங்கள் டெபிட் அல்லது கடன் அட்டையிலிருந்து திருட மோசடிகாரர்கள் பயன்படுத்தும் ஒரு முறைக்கு பெயர் தான் skimming. இதுபோன்ற வங்கி மோசடிகளை சமாளிக்க வங்கிகள் வழி கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கும் வேளையில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக செய்ய வேண்டியது எச்சரிக்கையாக இருப்பது மட்டும்தான். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி ஏடிஎம்களில் பணபரிவர்த்தனை செய்யும் போது செய்ய வேண்டிய குறிப்புகள்.

உங்கள் ஏடிஎம் PIN எண்ணை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அதை எங்கும் எழுதி வைக்காதீர்கள். குறிப்பாக ஏடிஎம் அட்டையிலேயே எழுதி வைக்காதீர்கள்.

PIN எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளீடு செய்யும் போது இயந்திரத்தில் உள்ள keypad ஐ மறைத்து கொள்ளுங்கள். இயந்திரத்தில் உள்ளீடு செய்யும் போது ஏடிஎம் இயந்திரத்தோடு ஒட்டி நின்று உங்கள் உடம்பு மற்றும் கையை கொண்டு keypad ஐ நன்றாக மறைத்து கொண்டு உள்ளீடு செய்யுங்கள்.

ஐஓபி இணையதள வங்கி சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது?

ஏடிஎம் இயந்திரத்தை உபயோகபடுத்தி முடித்து விட்டு செல்லும் முன்பு 'Cancel' key ஐ அழுத்தவும். மேலும் உங்கள் ஏடிஎம் அட்டை மற்றும் பரிவர்த்தனை ரசீதை எடுத்து செல்ல மறந்துவிடாதீர்கள்.

பணம் அல்லது செக்கை ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் வைப்பு செய்தால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து உங்கள் வங்கி கணக்கை சரிபாருங்கள். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் உடனடியாக வங்கி கிளையை தெரியப்படுத்தவும்.

உங்கள் அட்டை ஏடிஎம் இயந்திரத்தில் மாட்டிக் கொண்டாலோ அல்லது பணம் வெளியே வராமல் இருந்தாலோ உடனடியாக உங்கள் வங்கியை அழைக்கவும்.

உங்கள் ஏடிஎம் அட்டை தொலைந்தாலோ அல்லது களவு போனாலோ உடனடியாக அந்த அட்டையை வழங்கிய வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment