ஐசிஐசிஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்த சிறப்பு அறிவிப்பு குறித்த விவரம். பிக்சட் டெபாசிட் திட்டத்தில் தனக்கென தனி இடைத்தை பிடிக்கும் நோக்கிலும், வாடிக்கையாளர்களை அளவில்லாத சந்தோஷத்தில் ஆழ்த்தும் வண்ணம் ஐசிஐசிஐ வங்கி மிகச் சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கி நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கியில் ஏற்கனவே பிக்சட் டெபாசிட் திட்டங்களை தொடருபவர்கள் இனி அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதத்தை பெற முடியும். அல்லது வரும் காலங்களில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடர நினைப்பவர்களுக்கும் ஐசிஐசிஐ வங்கியின் இந்த அறிவிப்பு சூப்பர் டூப்பர் வாய்ப்பாக அமையும்.
தெரிந்துக் கொள்வோம்.. உங்களின் கிரெடிட் கார்ட் மீது கடன் வாங்க முடியும்!
பெரும்பாலான மக்களால் அதிகம் சேவிங் அக்கவுண்ட் தொடரப்படும் வங்கிகள் லிஸ்டில் ஐசிஐசிஐ வங்கிக்கும் இடம் உண்டு. இந்நிலையில் இந்த வங்கி நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிலையான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
குறைவான வட்டி விகிதத்தை எண்ணி கவலையடைந்த வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பு மூலம் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது . இறுதியாக பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் 2018 ஆகஸ்ட் 14 முதல் உயர்த்தப்பட்டது.
dont miss it..5 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம்.
ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்கள், பொதுப் பிரிவினர் என இருதரப்பினருக்கும் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை கீழே தெரிந்துக் கொள்ளலாம்.
> 1 - 2 வருடம் - 6.75 சதவீதம் - 7. 25 (மூத்த குடிமக்கள்)
> 2 - 3 வருடம் - 7 சதவீதம் - 7. 75 (மூத்த குடிமக்கள்)
> 3 - 5 வருடம் - 7 சதவீதம் - 7. 5 (மூத்த குடிமக்கள்)
dont miss it.. பல முறை அலைந்தும் வங்கியில் ஹோம் லோன் கிடைக்கலையா? இதுதான் காரணம்!