icici bank mobile banking icici bank net banking ஆன்லைன் மூலமாக ஒரு வங்கி கணக்கை திறக்க நினைக்கு வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி, ஆதாரை அடிப்படையாக கொண்ட உடனடி டிஜிட்டல் சேமிப்பு கணக்கான ’ICICI Insta Save account’ அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisment
இந்த வங்கி கணக்கில் Insta Save Account மற்றும் Insta Save FD Account என இரு வகைகள் உள்ளன.
1. Insta Save account என்பது ஒரு உடனடி சேமிப்பு கணக்கு, இதற்கு மாதாந்திர சராசரி இருப்பாக ரூபாய் 10,000/- தேவைப்படுகிறது.
2. மறுபுறம் Insta Save FD account என்பது, FD யுடன் உள்ள உடனடி சேமிப்பு கணக்கு. மேலும் இந்த வங்கி கணக்கில் கணக்கு வைத்திருப்பவர் எந்தவித குறைந்தபட்ச இருப்பும் வைக்க தேவையில்லை. ஆனால் ரூபாய் 10,000/- க்கு ஒரு வருடத்துக்கான நிரந்தர வைப்புத் தொகையை (FD) முதலீடு செய்ய வேண்டும்.
3.உடனடியாக கணக்கு வைத்திருப்பவர் பரிவர்த்தனைகளை இணையதள வங்கி சேவை மூலமாகவும், iMobile application மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
4. இந்த வங்கி கணக்கை திறக்க கணக்குதாரருக்கு ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு எண் (PAN) கட்டாயம் தேவை. மேலும் அவருடைய ஆதார் எண் கைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இணைக்காவிட்டால் Insta Save Account திறப்பதை செயல்படுத்த முடியாது.
Insta Save FD கணக்கை புதிய வங்கி வாடிக்கையாளர்களால் மட்டும் தான் திறக்க முடியும். ஐசிஐசிஐ வங்கியில் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரால் Insta Save FD கணக்கை தேர்வு செய்ய முடியாது. எனினும் அவர் Insta Save account ஐ திறக்கலாம்.
icici bank mobile banking icici bank net banking : எப்படி திறப்பது?
ஐசிஐசிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்லவும்.
வங்கி கணக்கு வைத்திருப்பவரின் கைபேசி எண்ணுக்கு அனுப்பபடும் OTP அடிப்படையில் கணக்கு திறக்கப்படும்.
PAN எண் NSDL மூலமாக சரிப்பார்க்கப்படும். கைபேசி எண் OTP மூலம் சரிப்பார்க்கப்படும்.