உரிய வரியை புதிய மற்றும் பழைய வரிவதிப்பு முறையில் ஒப்பிட்டு பார்க்க வருமான வரித்துறை இ கால்குலேட்டர்(e Calculator)ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய பட்ஜேட்டில் அறிவித்துள்ளது போல, புதிய வரிவதிப்பு முறையை தேர்ந்தேடுக்கும் தனி நபர்கள் தாங்கள் கட்ட வேண்டிய வரியை, வரி கழித்தல் மற்றும் வரி விலக்கு கோராமல் மதிப்பீடு செய்து பார்த்து வருமான வரி தாக்கல் செய்ய எதுவாக வருமான வரித்துறை ஒரு இ-கால்குலேட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது, என வருமான வரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எஃப்.டி. கணக்கர்களுக்கு குறைக்கப்பட்ட வட்டி விகிதம்... சோகத்தில் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள்
உள்நாட்டில் உள்ள தனிநபர்கள் (நிதியாண்டு 2020 - 2021), பழைய மற்றும் புதிய வரிவிதிப்பு முறையில் உள்ள வரிவிகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு ஒப்பீட்டு அட்டவணையை வருமான வரி தாக்கல் செய்யும் அதிகாரப்பூர்வமான வருமான வரிதுறை இணையதளத்தில் https://www.incometaxindiaefiling.gov.in. காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தனிநபர்கள் மற்றும் பல்வேரு பிரிவினர், மின்னணு முறையில் வருமான வரி செலுத்துவதற்காக இந்த இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வருமான வரிசெலுத்தும் சாதாரண குடிமக்கள் மூன்று பிரிவினராக அதாவது 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், மூத்த குடி மக்கள் (60 முதல் 79 வயது வரை) மற்றும் மிக மூத்த குடிமக்கள் (79 வயதுக்கு மேலானவர்கள்) தங்களுக்கு வரும் அனைத்து விதமான வருமானத்தையும் மதிப்பீடு செய்து தகுதியுள்ள மொத்த வரி கழித்தல்கள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றுடன் இந்த கால்குலேட்டரில் உள்ளீடு செய்தால் புதிய மற்றும் பழைய வரிவிதிப்பு முறையில் தாங்கள் செலுத்த வேண்டிய மொத்த வரிவிதிப்பு வருமானம் எவ்வுளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
பான்கார்ட் விபரங்களை ஆதாருடன் இணைத்துவிடுங்கள்! இல்லையேல் இனி பயனே இல்லை...
மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்த புதிய வரிவிதிப்பு முறையில் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருட வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவிகித வரிவிதிக்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து கூடுதலாக ஒவ்வொரு 2.5 லட்சம் விகிதம் வருமானம் உள்ளவர்களுக்கு 10, 15, 20 மற்றும் 25 சதவிகிதம் என கூடுதலாக வரிவிதிக்கப்படுகிறது. வருட வருமானம் 15 லட்சத்துக்கு அதிகமாக உள்ளவர்களுக்கு 30 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.