Income Tax Return: மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய படிவம் (Form) 26AS ஐ அறிவித்ததால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிதாகிறது.
கடந்த வருடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் அமர்வுக்கு மத்தியில் வருமான வரித்துறை, அட்டவனை (Schedule) 112A என்ற பெயரில் ஒரு புதிய தாளை தொடர்புடைய வருமான வரி கணக்கு படிவங்களில் சேர்த்தது.
எஸ்.பி.ஐ-யில் இந்தச் சலுகையை பயன்படுத்தும் முன்பு 2 முறை யோசிங்க! வட்டி முழு விவரம்
அட்டவணையில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 புலங்கள் (fields) உள்ளன, அவை பங்குகள், ஈக்விட்டி MFs கள் மற்றும் / அல்லது வணிக அறக்கட்டளையின் அலகு (unit of a business trust) ஆகியவற்றிலிருந்து மீட்டெடுப்பதன் மூலதன ஆதாயம் அல்லது இழப்புக்கு சமமானதாகும். பல துறை சார்பற்ற சம்பள முதலீட்டாளர்களுக்கு அனைத்து பரிவர்த்தனைகளையும் நினைவுகூறுவதும், ISIN Code போன்ற விவரங்களைக் கண்டுபிடிப்பதும் கடினமான பணியாக இருந்தது, குறிப்பாக மியூச்சுவல் பண்ட் (MF) திட்டங்களுக்கு.
வரிவிதிப்பு ஆண்டு 2019-2020 ல் ஜூலை 11, 2019 வரையில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில் மக்கள் மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் ISIN Code ஐ கண்டுபிடிக்க கடினபட்டு கொண்டிருந்த வேளையில் வருமான வரித்துறை அட்டவணை 112 A கட்டாயமில்லை என்றும் மதிப்பீட்டாளர்கள் (assessees) மூலதன ஆதாயம் / இழப்பு குறித்த ஒருங்கிணைந்த தரவை வழங்கலாம் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
இந்த வருடம் மதிப்பீட்டாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்குவதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes- CBDT) ஒரு புதிய படிவம் 26AS ஐ அறிவித்துள்ளது. இந்த படிவத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரி, செலுத்தப்பட்ட வரி, வேறு சில வரிவிதிப்பு வருமானத்துடன் முதலீடு செய்யப்பட்ட வரி, நிரந்தர வைப்பு மீதான வட்டி போன்ற விவரங்கள் இருக்கும்.
’இந்த புதிய படிவம் 26AS ஒரு விரிவான நிதிநிலை அறிக்கையாகும். TDS மற்றும் TCS தவிர அந்த வருடத்தில் (ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல்) செய்த நிதி பரிவர்த்தனைகளான பங்கு மற்றும் மியூச்சுவல் பண்ட் பரிவர்த்தனைகள், கடன் அட்டை பில் செலுத்துதல் போன்றவற்றையும் காட்டும். இது முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வருமான வரி நடவடிக்கைகளின் விவரங்களையும் காட்டுகிறது’, என CharteredClub.com நிறுவனர் மற்றும் CEO, CA Karan Batra கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்களா? எஸ்.பி.ஐ புதிய வசதி
பங்கு மற்றும் மியூச்சுவல் பண்ட் பரிவர்த்தனைகள், கடன் அட்டை கொடுப்பனவுகள் (payments) போன்ற பல -TDS அல்லாத தகவல்களும் படிவம் 26AS இல் காட்டப்படும் என்பதால் இது வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த உதவும், என் அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து பரிவர்த்தனை விவரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால், பங்கு மற்றும் / அல்லது சொத்து பரிவர்த்தனைகளைக் கொண்ட மதிப்பீட்டாளர்கள் இந்த ஆண்டு தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietami
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.