/tamil-ie/media/media_files/uploads/2018/06/Income-Tax-Return-2018.jpg)
Income Tax Return
நடப்பு மதிப்பீட்டு ஆண்டு (2018-19) மற்றும் நிதியாண்டிற்கான வருமான வரியை திருப்பிச் செலுத்த ஜூலை 31 தான் கடைசி நாள். நடப்பு நிதியாண்டில் 2,50,000ற்கும் மேலாக வருமானம் உள்ளவர்கள் கட்ட வேண்டிய வருமான வரியை எளிதாக திருப்பிச் செலுத்த எளிய முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றது வருமான வரித்துறை.
மூத்த குடிமக்கள் (60 வயதிற்கு மேல் 80 வயதிற்குள்) வருமானம் 3,00,000த்தையும், மிக மூத்த குடிமக்கள் (80 வயதிற்கு மேல் உள்ளவர்கள்) வருமானம் 5,00,00த்தையும் தாண்டும் போது அவர்களும் வருமான வரியைக் கட்ட வேண்டும். இந்த உச்ச வரம்பிற்குள் வராத வருமானத்தை உடையவர்களும் வருமான வரித்தாக்கல் செய்யலாம்.
உங்களுடைய வரியை வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் இருந்து செலுத்த http://www.incometaxindiaefiling.gov.in
வரியை திருப்பி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக, வருமான வரித்துறை, தனித்தனியாக கேட்டகிரி பிரித்து வைத்திருக்கின்றது. அதன்படி, சொந்த வேலை செய்பவர்கள், தொழில் முனைவோர்கள், வேலைக்குச் செல்பவர்கள், ஃப்ரீலேன்சிங் செய்பவர்கள் என தனித்தனியாக வருமானவரி தாக்கல் செய்யலாம்.
50 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரியை தாக்கல் செய்ய இ-போர்டலை அறிமுகப்படுத்தியது வருமானவரித்துறை. ஐடிஆர் பார்ம் - 1 எனப்படும் அந்த ஃபார்மில் விண்ணப்பிக்கும் முறையையும் எளிமைப்படுத்தி இருக்கின்றது வருமான வரித்துறை. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இருமுறைகளிலும் வருமான வரியினைத் திருப்பிச் செலுத்தலாம்.
வருமான வரியை திருப்பிச் செலுத்த உங்களிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் பற்றி அறிய
பான்கார்ட், வங்கிக் கணக்கு விபரம், வரி சேமிப்பு ஆவணங்கள், கடன் பத்திரங்கள், டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source), ஆதார் அட்டை ஆகியவற்றை கையில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.