மெதுவான வருவாயின் பின்னணியில் நுகர்வு குறைந்து வருவதால், முந்தைய மதிப்பீட்டின்படி 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP - ஜிடிபி) வளர்ச்சி 2024 நிதியாண்டில் 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கியின் அறிக்கை செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
உலக வங்கி, அதன் இந்திய வளர்ச்சி அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி மெதுவான நுகர்வு வளர்ச்சி மற்றும் சவாலான வெளிப்புற நிலைமைகளால் கட்டுப்படுத்தப்படும் என்று கூறியது.
இதையும் படியுங்கள்: கிராமுக்கு ரூ.65 வீதம்.. சட்டென உயர்ந்த தங்கம்.. புதிய விலை இதுதான்!
"அதிகரிக்கும் கடன் செலவுகள் மற்றும் மெதுவான வருமான வளர்ச்சி ஆகியவை தனியார் நுகர்வு வளர்ச்சியை பாதிக்கும் மற்றும் தொற்றுநோய் தொடர்பான நிதி ஆதரவு நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதால் அரசாங்க நுகர்வு மெதுவான வேகத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று உலக வங்கி அறிக்கை கூறியது.
2023-24 நிதியாண்டில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக குறையும் என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) FY24 இல் 5.2 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil