/tamil-ie/media/media_files/uploads/2019/08/maru.jpg)
Indian automobile industry Maruti Ertiga production
Indian automobile industry Maruti Ertiga production : கடந்த சில மாதங்களாகவே வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கின்றது இந்திய ஆட்டோ மொபைல் சந்தை. தற்போது பல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடியும், உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், 1.3 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட எர்டிகா ரக காரின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 2020 ஏப்ரல் முதல் பாரத் ஸ்டேஜ் VI எமிஷனுக்கான விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து எர்டிகா காரின் 1.3 டீசல் என்ஜின் கார் உற்பத்தியும் விற்பனையும் நிறுத்தப்பட உள்ளது.
Indian automobile industry Maruti Ertiga production will be stopped soon
1.3 லிட்டர் என்ஜின் ரகங்கள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஆகத் தொடங்கின.
இனிமேல் எர்டிகா கார் வரிசையில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ரகம் மட்டுமே விற்பனையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 105bhp மற்றும் 138Nm டார்க் வெளியீடு இருக்கும். இந்த 1.5 லிட்டர் என்ஜின் ரகம் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மேலும் டீசல் ரகக் கார்களை நிறுத்த முடிவெடுத்திருப்பதால் 2020 பிப்ரவரி மாதம் புதிய வித்தாரா ப்ரெஸ்ஸா காரை மாருதி சுசூகி அறிமுகம் செய்ய உள்ளதென்றும் புதிய வித்தாரா ப்ரெஸ்ஸா 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் அறிமுகப்படுத் தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.