வீழ்ச்சியில் ஆட்டோ மொபைல் சந்தை... ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி விலையில் மாருதியின் டிஸைர்

எலெண்ட்ரா வகை கார்களுக்கு ரூ. 1.2 லட்சம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக ஹூயூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

Pritish Raj

Indian automobile industry growth at lowest level : 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆட்டோ மொபைல் துறையில் மாபெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தயார் செய்திருக்கும் பல்வேறு மாடல்களை குறைந்த விலையில், அதிக சலுகைகளுடன் விற்பனை செய்துவிடும் முனைப்பில் உள்ளனர்.

வாடிக்கையாளர்கள் தரப்போ, எப்போது ஜி.எஸ்.டி. குறையும் என்று காத்துக் கொண்டுள்ளனர். அப்படி ஜி.எஸ்.டி குறைக்கப்படுமானால், சலுகைகளும் குறைக்கப்பட்டு நெட்-டூ-நெட் விலையில் தான் கார்களை உற்பத்தியாளர்கள், மற்றும் நிறுவனங்கள் விற்பனை செய்யும். எனவே வாடிக்கையாளர்கள் இதனால் எந்த பயனையும் பெற்றுவிட இயலாது. எனவே தற்போது அதிக சலுகை விலையில் கார்கள் விற்பனைக்கு வந்தால் யோசிக்காமல் வாங்கிவிடுங்கள்.

Indian automobile industry growth at lowest level

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் டீம், இது தொடர்பாக வல்லுநர்களை சந்தித்து பேசிய போதும் அவர்களின் கருத்தும் இப்படியாகவே இருந்தது. தற்போது சலுகை விலையில் கிடைக்கும் கார்கள், அப்போது நிச்சயமாக அதே விலையில் கிடைக்காது. ஜி.எஸ்.டி. உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமே தவிர வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சியை அளிக்காது என்றும் கூறியுள்ளனர்.

இந்திய மோட்டர் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை கட்டுப்படுத்த பாரத் ஸ்டேஜ் எமிசன் என்ற புதிய பி.எஸ். தொழில்நுட்பத்தினை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியது. வருகின்ற 6 மாதத்தில் பி.எஸ். VI எமிசன்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர உள்ளது. அதற்குள் கார்களை விற்கும் நோக்கில் விநியோகஸ்தர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க : 

மார்ச் 31, 2020ம் ஆண்டின் போது உற்பத்தியாளர்களால் பி.எஸ். 4 ரக வாகனங்களாஇ விற்பனை செய்ய இயலாது. விற்பனை செய்ய முடியாத கார்கள் நிச்சயமாக ஸ்க்ராப் செய்யப்படுமே தவிர அதனால் யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. இந்த நடைமுறை சிக்கலையும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

மாருதி சுஸிக்கி, ஹூயூண்டாய் மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களின் கார்களை சலுகை விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர் அதன் டீலர்கள். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சலுகை விலைகள் மிகவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை…

புதிய சலுகை விலைகள்

மாருதி சுஸிக்கியின் புகழ்பெற்ற காரான டிசைர் தற்போது ரூ.50 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேன்ச் போனஸ், ஃப்ரீ இன்ஸூரன்ஸ் மற்றும் உதிரி பாகங்கள் என மொத்தமாக கணக்கிட்டால் ரூ.70 ஆயிரம் வரை சலுகை விலையில் இந்த காரினை பெற்றிட இயலும்.  இந்த காம்பேக்ட் செடனின் பெட்ரோல் கார் விலை ரூ. 5.9 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால் தற்போதைய விலையோ ரூ.5.30 லட்சம் தான்.  டீசல் ரக கார்களுக்கு மேலும் ரூ. 20 ஆயிரம் வரை சலுகைகள் கிடைக்கின்றன.

மாருதியின் ஸ்விஃப்ட் கார், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் வகைகளில் ஒன்றாகும். தற்போது ரூ.43 ஆயிரம் தள்ளுபடியில் இந்த கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஒட்டுமொத்த சலுகையாக ரூ.68 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்விஃப்ட் காரின் தற்போதைய ஆரம்ப விலை ரூ. 6.5 லட்சம் ஆகும். இதற்கு முன்பு 7 லட்சம் வரையில் விற்பனையானது.  பலேனோவுக்கு 40 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும், வித்தாரா ப்ரெஸ்ஸாவுக்கு ரூ. 60 ஆயிரம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூயூண்டாய் நிறுவனத்தின் ஐ10 காரின் தற்போதைய சலுகை ரூ.60 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதர சலுகைகள் ரூ.35 ஆயிரம் வ்அரை செல்வதால் ரூ.4.35 லட்சத்திற்கு இந்த கார்கள் விற்பனையாகின்றன. எலெண்ட்ரா வகை கார்களுக்கு ரூ. 1.2 லட்சம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுவதாக ஹூயூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close