indianbank netbanking online: இந்த நேரத்தில் இந்த தகவல் உங்களுக்கு கண்டிப்பாக உதவும். வங்கிகளில் தவணை கட்ட வேண்டும் என்று வரும் எந்த மோசடி கால்களுக்கும் பயப்படாதீர்கள். ஓடிபி கேட்டாலும் கூறாதீர்கள். அது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் வாய்ப்பாக அமைந்துவிடும் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். எனவே வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.
Advertisment
ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்பட பெரும்பாலான வங்கிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்தியன் வங்கியில் லோன் பெற்றவர்கள் இந்தியன் நெட் பேக்கிக் மூலம் பணத்தை செலுத்த வேண்டும். அல்லது கணக்கில் போதிய தொகையை வைத்திருத்தல் நல்லது. இதை தவிர வேற எந்த ஒரு முறையிலும் லோக இஎம்ஐ செலுத்த வேண்டாம் என அறிவுருத்தப்பட்டுள்ளது. . இது தொடர்பான எச்சரிக்கையை இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது.
indianbank netbanking online : உஷார்!
அதில், ‘கொரோனா நிவாரணமாக தவணை தள்ளிவைப்பு தொடர்பாக இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் ஓ.டி.பி எண் கேட்பதே இல்லை. எனவே மோசடிக்காரர்களிடம் உஷாராக இருங்கள்’ என கேட்டுக் கொண்டிருக்கிறது இந்தியன் வங்கி.
அதாவது, உங்கள் வங்கியின் தவணைத் தொகை தள்ளி வைப்புக்காக எனக் கூறி உங்கள் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி, அதில் வரும் ஓடிபி எண்ணை உங்களிடம் கேட்டால் உஷாராகிவிடுங்கள். அவர்கள் மோசடிக்காரர்களாக இருப்பார்கள். உங்கள் வங்கியிலோ, சைபர் கிரைமிலோ புகார் கொடுத்து மோசடிக்காரர்கள் மீது நடவடிக்கைக்கும் உட்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil