Advertisment

இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான்பா! இப்படி ஒரு சலுகையா?

5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi mutual fund

sbi mutual fund

iob atm charges: வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம்கள்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.

Advertisment

இந்த கட்டணத்தை தேசிய பண பரிவர்த்தனை கழகம் நிர்ணயிக்கிறது. இந்த நிலையில், தற்போது உள்ள கட்டணத்தை மேலும் ₹1.5 முதல் ₹2 உயர்த்த வேண்டும் என ஏடிஎம் நிறுவனங்கள் கோரியுள்ளன. இதுதொடர்பாக வங்கிகள் மட்டும் ஏடிஎம் நிறுவியுள்ள மற்றும் நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடந்து வருகிறது.

மேற்கண்ட பரிவர்த்தனை கட்டணத்தை 17 ரூபாயாக அதிகரிக்கலாம் என தேசிய பண பரிவர்த்தனை கழகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் தடுமாறி வரும் வங்கிகள் இந்த கட்டணத்தை உயர்த்துவதை விரும்பவில்லை.

அவசர காலத்தில் அட்டகாசமான 3 வகை கடன் வசதிகள்.. வாரி வழங்கும் எஸ்பிஐ!

இது புறம் இருக்கட்டும், இந்தியன் ஒவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஐஓபி ஏடிஎம்- கார்டை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த தகவல். மற்ற எந்த வங்கியிலும் இல்லாத ஒரு சிறப்பான சலுகை இந்த வங்கியில் உள்ளது.

publive-image

ஆம், அந்த வங்கியின் ஏடிஎம் கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது.  அதே போல்   வருடாந்திர கட்டணமாக ரூ. 150 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.  வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு இந்தியன் ஒவர்சிஸ் வங்கியில் ரூ. 50000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment