Advertisment

ஒரே நாளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிரடி அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

விழாக்கால சலுகையாக வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iob schemes for senior citizens

iob schemes for senior citizens

iob interest rates : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. ஐஒபி வங்கியின் எம்.சி.எல்.ஆர். எனப்படும் கடன் வட்டி விகிதம் 0.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

Advertisment

எம்.சி.எல்.ஆர். என்பது வங்கிகளின் வட்டிச் செலவின அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கடன் வட்டி விகிதமாகும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனைத்து முதிர்வுகளிலும் இந்த வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது. இதனையடுத்து ஓராண்டு முதிர்வு கால வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைந்து 8.70 சதவீதமாக உள்ளது.

எஸ்பிஐ கஸ்டமர்ஸ் செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க.. 5 வகையான லோன் உங்களுக்காகவே!

இதே போன்று 2–3 ஆண்டுகளுக்கான எம்.சி.எல்.ஆர். முறையே 8.80 சதவீதம் மற்றும் 8.90 சதவீதமாக குறைந்து இருக்கிறது. 6 மாதங்களுக்கான இந்த வட்டி விகிதம் முதலில் 8.60 சதவீதமாக இருந்தது. இது இப்போது 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கான வட்டி விகிதம் (8.50 சதவீதத்தில் இருந்து) 8.45 சதவீதமாக குறைந்துள்ளது. இது தவிர, சுப கிரஹா திட்டம், என்ஆர்ஐ வீட்டு கடன், வீடு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களின் கீழ் வீட்டு கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணங்களை விழாக்கால சலுகையாக வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தெரிந்துக் கொள்ளுங்கள்! ஆன்லைன் வழியாகவே பான் கார்டில் இதையும் சேர்க்க முடியும்.

அதே போல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐஓபி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விளங்கி வருகின்றன. மேலும், இந்தியாவின் உள்ள 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment