pan card apply online : தனிநபர் மட்டும் இல்லாமல் அரசுக்கும் பான் எண் முக்கியமான ஒன்று. வருமான வரித் துறை அளிக்கும் 10 இலக்க பான் பிளாஸ்டிக் கார்டில் அச்சிடப்பட்டு இருக்கும். வங்கி கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரி தாக்கல் செய்ய எல்லாம் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று.
வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.
பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
1. புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
2. இப்போது தோன்றும் இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில் ‘Application Type’ -> ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவேண்டும்.
3. பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்த உடன் அளிக்கப்படும் டோக்கன் எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த டோக்கன் எண் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும்.
read more : அடேங்கப்பா...!பான் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த தவறை செய்தால் 10 ஆயிரம் அபராதம்!
4. தற்போது பான் கார்டு பெயர் ஆதார் கார்டில் உள்ளது போன்று தான் அளிக்கப்படுகிறது. எனவே ஆதார் கார்டு கட்டாயம். எனவே, நீங்கள் சமர்பிக்கும் ஆவணங்களுடன் ஆதார் எண் அடங்கிய ஆவணத்தையும் சேர்க்க வேண்டும். அப்படி செய்யும் போது ஆதார் எண்ணும் உங்கள் பான் கார்டுடன் இணைந்து விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.