IOB Tamil News: ஆன்லைன் பண பரிவர்த்தனை செயல்முறைகளை பயன்படுத்துவதை எளிதாக்குவதன் மூலம் இணைய வங்கி சேவை, பாரம்பரிய வங்கி முறைகளை புதுப்பித்துள்ளது. பல்வேறு வங்கி கணக்குகளுக்கு நிதியை பரிமாற்றுவது முதல் பொருட்கள் வாங்கியதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவது வரை பல்வேறு விஷயங்களை எளிதாக ஒருவர் இணையதளம் பயன்படுத்துவதன் மூலம் செய்யமுடியும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) யும் தனது வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி சேவையை வழங்குகிறது. நீங்கள் ஐஓபி வங்கி வாடிக்கையாளாராக இருந்து ஐஓபி வங்கி இணைய வங்கி சேவையின் நன்மைகளை பெற ஐஓபி இணைய வங்கி சேவையில் பதிவு செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
கடன், தவணை: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகளின் இந்த முக்கிய ‘அப்டேட்’ தெரிஞ்சுகோங்க!
ஐஓபி இணைய வங்கி சேவையில் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்?
Step 1: www.iobnet.co.in என்ற இணையதள முகவரியில் முதலில் லாக் இன் (login) செய்து கொள்ளுங்கள்
Step 2: நீங்கள் தனிநபர் என்றால் Register Individual என்பதில் சொடுக்க வேண்டும். தனியார் நிறுவனம் என்றால் Register Corporate என்பதில் சொடுக்கவும்.
Step 3: நீங்கள் பதிவு செய்ததும், விண்ணப்ப படிவத்தை உங்களது வங்கி கணக்கு உள்ள கிளையில் சமர்பிக்க வேண்டும்.
Step 4: இணைய வங்கி சேவையை பெற செயலில் உள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம்
Step 5: அனைத்து நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த நீங்கள் PIN எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் PIN எண்ணை யாரிடமும் பகிரக்கூடாது.
Step 6: விண்ணப்பம் கிடைத்ததும் உங்கள் வங்கி கணக்கு கிளையால் செயல்படுத்தப்படும்.
ஐஓபி இணையதள வங்கி சேவைக்கான லாக் இன் செயல்முறை
Step 1: உங்களது கடவுச்சொல்லை பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும்
Step 2: கடவுச்சொல்லில் உள்ள எழுத்துக்கள் case sensitive
அசைக்க முடியா அம்பானி; ஆளுமை செலுத்தும் தமிழர்கள் - ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியல் 2020
Step 3: உங்களது லாக்-இன் கடவுச்சொல்லும் (login password) பரிவர்த்தனை (transaction) PIN ம் வேறு வேறானது. கடவுச்சொல் லாக்-இன் செய்வதற்கும், PIN நிதி பரிமாற்றத்துக்கும் பயன்படும்.
Step 4: உங்களது கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் போது கவனமாக இருக்கவும். தொடர்ந்து தவறான கடவுச்சொல்லை திரும்ப திரும்ப உள்ளீடு செய்தால் உங்களது இணையவங்கி சேவை முடக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது ஐஓபி இணைய வங்கி சேவைக்கு பதிவு செய்ய உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.