ஐஆர்சிடிசி மூலம் இ-டிக்கெட், தட்கல் டிக்கெட் முன்பதிவு – 11 முக்கிய நடவடிக்கைகள்

IRCTC : பயணிகள் விவரங்களை உள்ளீடு செய்வதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச நேரத்தை ஐஆர்சிடிசி சரிப்பார்க்கும். மேலும் இ-பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் display of CAPTCHA வழங்கப்பட்டுள்ளது

IRCTC Updates : ஆன்லைன் மூலம் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது முன்பதிவு முறையை தவறாக பயன்படுத்த முயற்சிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இந்தியன் ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி யால் கவனிக்கப்பட்டது. அத்தகைய நேர்மையற்ற தரகர்களின் இத்தகைய செயல்களை தடுக்க இந்திய ரயில்வேயின் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) பல சோதனைகளை இ-பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது அல்லது தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது பயன்படுத்துகிறது, என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் லோக் சபாவில் எழுத்துபூர்வமாக ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் கூறியுள்ளார். அவ்வாறான சில முக்கிய சோதனைகளை பற்றி பார்ப்போம்.

அதிக டிக்கெட்டுகளை புக் பண்ணனுமா? ஐஆர்சிடிசி கணக்கை ஆதாருடன் இணையுங்கள்

1. ஒரு பயனர் 2 தட்கல் முறை முன்பதிவு பயணச்சீட்டுகளை மட்டும் தான் காலை 10 முதல் 12 மணி வரை எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடை ஐஆர்சிடிசி கொண்டுவந்துள்ளது.

2. தட்கல் பயணச்சீட்டு முன்பதிவுக்கு random security question கள் ஐஆர்சிடிசி’ யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. ஒரு நாளுக்கு ஒரு ரயிலில் ஒரே ஒரு தட்கல் முன்பதிவு பயணச்சீட்டு என்ற கட்டுப்பாடு தரகர்களுக்கு (retail service providers- agents) விதிக்கப்பட்டுள்ளது.

4. கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரு நபர் ஒரே ஒரு ஐஆர்சிடிசி User ID ஐ மட்டும்தான் உருவாக்க முடியும்.

5. ஒரு தனி பயனர் ஒரு மாதத்துக்கு 6 ரயில் முன்பதிவு பயணச்சீட்டுகளை மட்டும் தான் முன்பதிவு செய்யமுடியும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பயனர் தனது ஐஆர்சிடிசி பயனர் ID ஐ ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால் அந்த எண்ணிக்கை 6 லிருந்து 12 ஆக உயர்த்தப்படும். பயணிகள் பட்டியலில் உள்ள ஒருவராவது ஆதார் மூலம் சரிப்பார்க்கப்படுவார்.

6. காலை 8 மணி முதல் 12 மணிக்குள் பயனர் தனது பயனர் ID மூலம் ஐஆர்சிடிசி தளத்தில் ஒரு முறை நுழைந்தால் ஒரு பயணச்சீட்டு மட்டும்தான் முன்பதிவு செய்யமுடியும் என்று ஐஆர்சிடிசி யால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் பயணம் அல்லது திரும்ப வருதல் தவிர்த்து.

காஷி மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பூஜைக்காக ஒதுக்கப்பட்ட பெர்த் குறித்து ஐஆர்சிடிசி விளக்கம்

7. Automation மென்பொருள் மூலம் முன்பதிவு மோசடியான முன்பதிவா என்பதை சரிபார்க்க பதிவு செய்யும் போது, உள்நுழையும் போது மற்றும் முன்பதிவு பக்கம் ஆகிய மூன்று இடங்களில் Dynamic captcha அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

8. பயணிகள் விவரங்களை உள்ளீடு செய்வதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச நேரத்தை ஐஆர்சிடிசி சரிப்பார்க்கும். மேலும் இ-பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் நேரத்தில் display of CAPTCHA வழங்கப்பட்டுள்ளது.

9. தட்கல் முன்பதிவு திறக்கப்பட்ட முதல் 15 நிமிடங்கள் மற்றும் Advance Reservation Period (ARP) ஆகிய நேரங்களில் ஐஆர்சிடிசி யால் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

10. அங்கிகரிக்கப்படாத பயணச்சீட்டு கொள்முதல் மற்றும் வினியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முகவர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக ரயில்வே பாதுகாப்பு படை தொடரந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

11. சட்டவிரோதமான இ-பயணச்சீட்டு முன்பதிவு வழக்குகளை கண்டுபிடித்து தொடர் நடவடிக்கை எடுப்பதற்காக PRABAL query-based application ஐ பயன்படுத்தி ஐஆர்சிடிசி ஐடி கள் சரிப்பார்க்கபடுகின்றன.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc e ticket tatkal ticket indian railways

Next Story
எஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி – ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகள் துவக்கம்yes bank, yes bank crisis, yes bank withdrawal limit, yes bank loans, yes bank withdrawal capped, yes bank bad loans, yes bank atm, yes bank money withdrawal, sbi to invest in yes bank, rbi on yes bank
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X