IRCTC iMudra: பயணசீட்டு முன்பதிவு செய்வது மட்டுமல்ல, பணத்தை வேறு வங்கி கணக்குக்கு மாற்ற, ஆன்லைன் மூலம் பணம் செலுத்த, ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்க இனி ஐஆர்சிடிசி யின் iMudra வை பயன்படுத்தலாம்.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் ஆன்லைன் வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் விமான பயணச்சீட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா திட்டங்கள் போன்ற பல சேவைகளையும் தொடங்கியுள்ளது. ஐஆர்சிடிசி யின் சமீபத்திய வெளியீடு iMudra ஆப். இதில் ஒரு டிஜிட்டல் அட்டை (digital card) வழங்கப்படுகிறது, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க (shop online) மற்றும் பணம் செலுத்த (make payments) என இந்த அட்டையை ஒரு physical அட்டையை போலவே பயன்படுத்தலாம்.
ஐசிஐசிஐ கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருக்கும் நண்பர்களே - நீங்கள் இப்படியும் ஏமாறலாம்
Federal வங்கியோடு இணைந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த iMudra VISA அட்டையை பயன்படுத்தி இந்திய இணையதளங்களில் இந்திய பணத்தில் பொருட்கள் வாங்கலாம், இரண்டு பயனர்களுக்கு இடையில் பணம் பரிமாற்றம் செய்யலாம் மற்றும் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க கூட இதை பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் அட்டைகள் இலவசமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் physical அட்டையை ரூபாய் 236/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எனினும் அட்டையை செயல்படுத்தும் (activation) கட்டணம் எதுவும் கிடையாது. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு டிஜிட்டல் அட்டை மற்றும் physical அட்டை மட்டுமே இருக்கலாம்.
பரிவர்த்தனை உச்சவரம்புகள் iMudra அட்டை பயனர்களின் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் நிலையை (KYC status) பொருத்தது. முழுவதுமாக முடிக்கப்பட்ட KYC மூலம் பணம் பரிமாற்றம் செய்யலாம், ஏடிஎம் மில் இருந்து பணம் எடுக்கலாம், உங்கள் wallet ன் மாதாந்திர வரம்பை ரூபாய் ஒரு லட்சம் வரை உயர்த்தலாம். ஆனால் குறைந்தபட்ச KYC ன் மாதாந்திர வரம்பு ரூபாய் 10,000/- மட்டும்தான்.
நில ஆவணங்களை ஆன்லைனில் தருவதன் மூலம் எளிதாகும் விற்பனை
ஆன்லைன் மூலமாக உங்கள் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் - ஆதாருடன் இணைக்கப்பட்டது மூலமாக நீங்கள் KYC ஐ முழுவதுமாக முடிக்கலாம் அல்லது offline மூலமாக physical சரிபார்ப்பு (verification) கோருவது மூலமாகவும் KYC ஐ முழுவதுமாக முடிக்கலாம்.
iMudra வை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டை சாதாரண முறையை விட மிக விரைவாக முன்பதிவு செய்யலாம். iMudra ஆப்பில் உள்ள Easy OTP என்பதை சொடுக்கினால் உங்களது ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) உருவாக்கப்படும். அதை ஐஆர்சிடிசி ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது தயாராக வைத்துக் கொள்ளலாம். ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது பணம் செலுத்த நீங்கள் iMudra தேர்வை iPay இன் கீழ் இருந்து தேர்ந்தெடுத்து ஏற்கனவே உருவாக்கப்பட்டு உங்களிடம் உள்ள ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொலை உள்ளீடு செய்ய வேண்டும்.
எந்த ஏடிஎம் மில் இருந்தும் physical iMudra அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். ஆனால் மாதத்துக்கு முதல் இரண்டு பரிவர்த்தனைகள் மட்டும் தான் Federal வங்கி ஏடிஎம் மில் இலவசம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”