ரூ.498க்கு இலவச ரீசார்ஜ்? - ஜியோ பற்றிய வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

Jio Free Recharge Plan : கொரோனா வைரஸ் குறித்த ஏராளமான போலி செய்திகள் (fake news) Facebook, Twitter மற்றும் WhatsApp போன்ற சமூக...

JIO:  உண்மையிலேயே ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 498/-க்கான ரீசார்ஜை இலவசமாக அளிக்கிறதா? வாட்ஸ் ஆப்பில் வரும் மெசேஜ்’களிள் உண்மையுள்ளதா?


ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 498/- க்கான இலவச ரீசார்ஜை அளிப்பதாக உங்களுக்கு வாட்ஸ் ஆப்பில் ஏதாவது குறுஞ்செய்தி வந்ததா. அப்படி வந்ததென்றால் அதை நம்பிவிடாதீர்கள் ஏனென்றால் அது வெறும் ஏமாற்று. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரிலையன்ஸ் ஜியோ இலவச ரீசார்ஜை அறிவித்துள்ளதாக ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்

அந்த ப்ரிபெய்ட் திட்டத்தில் அளவில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் அளவில்லாத 4G டேட்டா வழங்கப்படுவதாகவும், மேலும் அந்த திட்டம் 31 மார்ச் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அந்த போலி குறுஞ்செய்தி கூறுகிறது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தியோடு வரும் இணைப்பை சொடுக்க வேண்டும் என்றும் அந்த குறுஞ்செய்தி மேலும் கூறுகிறது.

எனினும் இது மக்களை கவர்ந்திழுக்க மோசடிகாரர்கள் பயன்படுத்தும் மற்றொரு வித்தை. அந்த போலி குறுஞ்செய்தியோடு வரும் இணைப்பை நீங்கள் சொடுக்கினால் உங்கள் கைபேசி அல்லது கணிணி malware களால் பாதிக்கப்படும். எனவே அவ்வாறான இணைப்புகளை சொடுக்குவதற்கு முன்பு அதற்கான மூல ஆதாரத்தை இரண்டு முறை சரிப்பார்க்கவும். ஏனென்றால் உங்கள் முக்கியமான தகவல்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை அவை வெளியில் கசிய செய்துவிடும்.

கார், டூவீலர் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – இதைத் தானே எதிர்பார்த்தோம்

கொரோனா வைரஸ் குறித்த ஏராளமான போலி செய்திகள் (fake news) Facebook, Twitter மற்றும் WhatsApp போன்ற சமூக ஊடகங்களில் நாள்தோறும் பகிரப்பட்டு வருகின்றன. இது போன்ற செய்திகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தவறான செய்திகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்துவதாக கூறும் போலி சிகிச்சைகள் குறித்த டிவிட்கள் அல்லது கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் டிவிட்கள் போன்றவற்றை நீக்கி விடப்போவதாக டிவிட்டர் கூறியுள்ளது. முன்னதாக Facebook, Google, Microsoft, Twitter and Linkedin, Youtube மற்றும் Reddit ஆகியவை சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது, அதில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான கூற்றுகள் மற்றும் சதி கோட்பாடுகளை எதிர்கொள்ள அவர்கள் இணைந்து செயல்பட போவதாக தெரிவித்திருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்த செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close