Jio News In Tamil: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களால் இணையதள பயன்பாடு அதிகரிப்பதால் ரிலையன்ஸ் ஜியோ தனது டேட்டா வவுச்சர்களின் நன்மைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ தனது 4G டேட்டா வவுச்சர்களான (data voucher) ரூபாய் 11, 21, 51 மற்றும் 101 ஆகியவற்றுக்கு இரண்டு மடங்கு டேட்டாவும் கால்களுக்கான off-net நிமிடங்களையும் கூடுதலாக வழங்குகிறது. பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்கும்விதமாக இது வழங்கப்பட்டுள்ளது என ஜியோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த திருத்தியமைக்கப்பட்ட மாற்றத்தினால் பயனர்கள் தங்கள் இணைப்பு தேவையை பூர்த்தி செய்ய தடையற்ற, ஏராளமான, மலிவான டேட்டா கிடைக்கும்.
நான்கு மணி நேரம் மட்டும் செயல்படும் வங்கிகள் - கடன் வழங்குவதும் நிறுத்தம்
ரூபாய் 11/- க்கான 4G டேட்டா வவுச்சரில் வாடிக்கையாளர்களுக்கு 800MB அதிவேக 4G டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 75 நிமிடங்களை கம்பெனி வழங்குகிறது. அதே போல ரூபாய் 21/-க்கான வவுச்சரில் 2GB அதிவேக 4G டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 200 நிமிடங்கள் கம்பெனியால் வழங்கப்படுகிறது.
ரூபாய் 51/- க்கான 4G டேட்டா வவுச்சரில் 6GB அதிவேக டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 500 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இருதியாக ரூபாய் 101/-க்கான திட்டத்தில் 12GB அதிவேக டேட்டா மற்றும் ஜியோ அல்லாத எண்களுக்கு கால் செய்ய கூடுதலாக 1,000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களுக்கான வேலிடிட்டி உங்கள் எண்ணுக்கு நீங்கள் செயல்படுத்தியுள்ள அடிப்படைத் திட்டத்தின் படி அமையும். கொடுக்கப்பட்டுள்ள அனைத்து FUP டேட்டாவும் தீர்ந்து விட்டால் சேவைகள் 64kbps என்ற குறைந்த வேகத்தில் தொடரும். பயன்படுத்தாத டேட்டா மற்றும் கூடுதலாக கொடுக்கப்பட்ட FUP நிமிடங்கள் உங்களுடைய அடிப்படைத் திட்டத்தோடு காலாவதியாகிவிடும்.
வீட்டில் இருந்து வேலை - இலவச பிராட்பேண்ட் வழங்கும் பிஎஸ்என்எல்
FUP voice நிமிடங்கள் மற்றும் டேட்டா தான் முதலில் உங்கள் அடிப்படைத் திட்டதிலிருந்து கழிக்கப்படும். அது முடிந்தப் பிறகு ஜியோ உங்களுடைய 4G டேட்டா வவுச்சரிலிருந்து கழிக்கத் துவங்கும். ஜியோ அல்லாத எண்களுக்கான voice கால்களை பொருத்தமட்டில் உங்களுடைய அடிப்படைத்திட்டம் மற்றும் 4G டேட்டா வவுச்சர் நிமிடங்கள் ஆகிய இரண்டையும் முழுவதுமாக பயன்படுத்தி முடித்து விட்டால், ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அடிப்படையில் கட்டணம் உங்கள் monetary balance ல் இருந்து வசூலிக்கப்படும் என கம்பெனி தெரிவித்துள்ளது.
4G டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்ய முதலில் உங்களுக்கு செயல்பாட்டில் உள்ள ஒரு அடிப்படைத் திட்டம் தேவை. 4G டேட்டா வவுச்சர் MyJio கண்க்கில் காண்பிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.