Advertisment

கிஸான் கடன் அட்டை எச்சரிக்கை: காலக்கெடுவுக்கு பிறகு என்ன நடக்கும் தெரியுமா?

kisan Card To Farmers In Tamil Nadu: கிஸான் கடன் அட்டை மூலம் கொடுக்கப்படாத ஏற்கனவே உள்ள குறுகிய கால பயிர் கடன்கள், மார்ச் 31, 2020 க்குள் கிஸான் கடன் அட்டை கடன்களாக மாற்றப் படவேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kisan Credit Card Alert Reserve Bank of India

Kisan Credit Card Alert Reserve Bank of India

Kisan Credit Card: கிஸான் கடன் அட்டை எச்சரிக்கை: இந்த காலக்கெடுவுக்கு பிறகு இனி அனைத்து பயன்களும் கிஸான் கடன் அட்டை மூலமாக தான் வினியோகிக்கப்பட போகிறது.

Advertisment

வரும் ஏப்ரல் 1, 2020 முதல் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வணிக வங்கிகளுக்கும் (Scheduled Commercial Banks -SCB), குறுகிய கால பயிர் கடனுக்கான வட்டி உதவித்தொகை Interest Subvention (IS) மற்றும் காலம் தவறாமல் திரும்ப செலுத்துவதற்கான ஊக்க தொகை (Prompt Repayment Incentive PRI) ஆகியவற்றுக்கான நன்மைகளை கிஸான் கடன் அட்டை யின் மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற அறிவுரையை பாரத ரிசர்வு வங்கி கடந்த புதன் கிழமை அன்று வழங்கியுள்ளது, என ஒரு செய்திகுறிப்பு கூறுகிறது.

எஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி - ஆன்லைன் பணபரிவர்த்தனை சேவைகள் துவக்கம்

கிஸான் கடன் அட்டை மூலம் கொடுக்கப்படாத ஏற்கனவே உள்ள குறுகிய கால பயிர் கடன்கள், மார்ச் 31, 2020 க்குள் கிஸான் கடன் அட்டை கடன்களாக மாற்றப் படவேண்டும் என்றும் அது தெரிவிக்கிறது.

அதன்படி, கிஸான் கடன் அட்டை அல்லாத கணக்குகள் மூலம் குறுகிய கால பயிர்க் கடனுக்கான வட்டி உதவிதொகை திரும்ப செலுத்துதல் மார்ச் 31, 2020 க்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது.

மண்டல கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks) மற்றும் சிறிய நிதி வங்கிகள் (Small Finance Banks) தவிர மற்ற அனைத்து தனியார் மற்றும் பொது துறை வங்கிகளுக்கும் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே சேவிங்ஸ் அக்கவுண்டை ஓபன் பண்ணலாம் - எஸ்பிஐ வங்கி அசத்தல்

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் 23 ஜனவரி 2020 ல் வெளியிட்ட அலுவலக குறிப்பை No. F. 1- 20/2018-Credit-I, அடிப்படையாக கொண்டு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பில், ஏப்ரல் ஒன்று முதல் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வட்டி உதவி தொகை திட்டங்கள் மற்றும் குறுகிய கால பயிர் கடனை காலம் தவறாமல் திரும்ப செலுத்துவதற்கான ஊக்க தொகை வழங்குவது ஆகியவற்றை கிஸான் கடன் அட்டை மூலமாக அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அரசு கிஸான் கடன் அட்டையை விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை பெற கட்டாயம் தேவைப்படுகிற ஒன்றாக மாற்றியுள்ளது. கிஸான் கடன் அட்டை திட்டம் 1998 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு குறுகிய கால முறையான கடன் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்கள் விவசாய தேவைகளுக்காக கடனை இத்திட்டத்தின் மூலம் கவர்ச்சிகரமான வட்டிவிகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment