ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் பிரீமியம் - 30 நாட்கள் கூடுதல் அவகாசம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு இடையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆயூள் காப்பீட்டு பாலிசி புதுப்பித்தல் தேதி வரும் பாலிசிதாரர்கள் தங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசி பிரீமியம் தொகையை செலுத்த Insurance Regulatory and Development Authority of India (IRDIA) 30 நாட்கள் கூடுதல் சலுகைகாலத்தை வழங்கியுள்ளது.

மருத்துவ காப்பீட்டு பாலிசி மற்றும் மோட்டார் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பாலிசி ஆகியவற்றுக்கான புதுப்பித்தல் பிரீமியம் தொகையை செலுத்த IRDIA ஏற்கனவே கூடுதல் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

அவசரத் தேவைக்கு வீட்டுக்கே வந்து பணம் கொடுக்கும் எஸ்பிஐ – முழு தகவல் இங்கே

Life Insurance Council மற்றும் காப்பீட்டாளர்கள் (insurers) ஆகியவர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், IRDIA பிரீமியம் தொகை செலுத்துவதற்கான 30 நாட்கள் கூடுதல் சலுகையை வழங்குவதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நாடுதழுவிய மூன்று வார ஊரடங்கு மற்றும் சமூக விலகல் காரணமாக பாலிசிதாரர்கள் சந்திக்கும் செயல்பாட்டு தடைகள் மற்றும் சிரமங்களைக் காப்பீட்டாளர்கள் மற்றும் Life Insurance Council மேற்கோள்காட்டியிருந்தன.

முதிர்ச்சியடைந்த Unit linked policy களுக்கு (மே 31, 2020 வரை) மொத்தமாக செலுத்தப்பட வேண்டிய நிதி மதிப்புகளுக்கு ஆயுள் காப்பீட்டாளர்கள் தொடர்புடைய ஒழுங்குமுறைக்கு ஏற்ப தீர்வு விருப்பங்களை வழங்கலாம், என IRDIA மேலும் கூறியுள்ளது.

மார்ச் 25 முதல் ஏப்ரல் 14, 2020 வரை முடியக்கூடிய மருத்துவ காப்பீட்டு பாலிசி மற்றும் மோட்டார் மூன்றாம் தரப்பு காப்பீட்டு பாலிசி பிரீமியம்களை ஏப்ரல் 21, 2020 க்குள் செலுத்தலாம் என கடந்த வாரம் IRDIA தெரிவித்திருந்தது. இந்த பாலிசிகளுக்கு Risk cover காலாவதியான தேதியிலிருந்து புதுப்பித்தல் தேதிவரை தொடரும்.

அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு

இதற்கிடையில் regulatory returns ஐ தாக்கல் செய்ய IRDIA காப்பீட்டாளர்களுக்கு கூடுதல் கால அவகாசத்தையும் வழங்கியுள்ளது.

மாதாந்திர returns ஐ தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் 15 நாட்கள் மேலும் காலாண்டு மற்ரும் அரையாண்டு returns ஐ தாக்கல் செய்ய காப்பீட்டாளர்கள் 30 நாட்கள் அவகாசம் பெறுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close