இன்ஸ்யூரன்ஸ் வாங்கனும்னா ஏனோதானோன்னு இருக்க கூடாது! எச்சரிக்கை செய்யும் பொருளாதார வல்லுநர்கள்!

Insurance Policy Investment Tips : கையெழுத்திடும் முன்பு ஒப்பந்தங்களை முழுமையாக படித்து பாருங்கள்...

Life Medical Insurance Policy Buying Tips : ஒவ்வொரு நிதியாண்டின் இறுதி காலாண்டில் தான் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் 50% வருமானத்தை ஈட்டும். ஏன் என்றால் இந்த காலகட்டங்களில் தான் வாடிக்கையாளர்கள் நிறைய காப்பீடுகளை வாங்குவார்கள். வருமானவரி சட்டத்தின் 80சி பிரிவின் படி காப்பீடுகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த காரணத்தால் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் காப்பீடுகளை அதிகமாக வாடிக்கையாளர்கள் வாங்குவது வழக்கமாக இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அதில் 15-20% பேர் நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலனோர் வருமான வரி கட்டும் வரம்புக்குள் வருகின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் காப்பீடுகளை வாங்க ஆரம்பிக்கின்றனர்.   சில நேரங்களில் ஒரு சிறிய அளவு காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு அதிகமாக பணம் செலவழிக்கின்றனர் இளைஞர்கள். தன்னுடைய குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பினை உள்ளடக்கிய தொகையை (அவர்களின் வருமானம் இன்றி) அவர்களின் காப்பீட்டுத் திட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆயுள் காப்பீடு என்பது நீண்ட கால ஒப்பந்தமாகும். ஆரம்பத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் நுழைவது எளிதானது என்று தோன்றலாம். ஆனால் ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது மிகவும் கடினம். யாராவது ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை நிறுத்தினால், பெரும்பாலான நேரம் அவர் பிரீமியமாக அல்லது சில நேரங்களில் முழுத் தொகையாக டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் பெரும் பங்கினை இழக்க நேரிடுகிறது.

பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி ஒரு சிறிய தொகை செலுத்தப்படாது என்பதை அறிய அவர்கள் நுகர்வோர் மன்றத்தில் புகார்களைத் தாக்கல் செய்கிறார்கள். பிரிவு 80சி இன் கீழ் வரியைச் சேமிப்பதற்காக பலர் தவறான முடிவை எடுக்கிறார்கள் அல்லது நேர்மையற்ற இடைத்தரகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இந்த செயல்பாட்டில் அவர்கள் வருமான வரி நிவாரணமாக செலுத்தப்படும் பிரீமியத்தின் 20 முதல் 30% வரை அவர்கள் பெறுவதை விட அதிகமாக இழக்கிறார்கள்.

மேலும் படிக்க : ரூ.100 சாப்பாட்டுக்கு ரூ.170 பில் கட்டுறோம்..! ஸ்விக்கியின் உண்மை முகம் இது தானா?

அடுத்தமுறையாவது எச்சரிக்கை வேண்டும்!

இந்த மோசமான நிகழ்வால் காப்பீடு வாங்குபவர் காப்பீட்டாளரை குறை கூற இயலாது. அதே போன்று ஆயுள் முழுவதும் காப்பீட்டுத் தொகையில் இருந்து தப்பிக் கொள்ளவும் முடியாது. ஆனால் இரண்டாம் முறையாக காப்பீட்டினை வாங்கும் போதாவது அறிவாக செயல்பட வேண்டும். முன்மொழிவு படிவத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு காப்பீட்டினை நன்றாக உள்வாங்கி பின்பு கையெழுத்திடுவது நலம்.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்றாக உள்வாங்கிக் கொண்டு பின்பு கையெழுத்திடலாம். ஒரு வருடம் முழுவதும் சரியாக திட்டமிட்டு திட்டங்களை ஒருவர் வாங்கலாம். இறுதி காலாண்டில் அனைவரும் வாங்குகிறார்கள் என்று தாங்களும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close