Advertisment

பிரபல வங்கியின் மிகச் சிறந்த அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் செம்ம ஹாப்பி!

கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களிலும் 0.10 சதவீதம் குறைவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank of india zero balance account

state bank of india zero balance account

low interest personal loan: பொதுத்துறை வங்கி நிறுவனமான பாங்க் ஆஃப் பரோடா செவ்வாய்க்கிழமை தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.

Advertisment

பாங்க் ஆஃப பரோடாவின் இந்த முடிவால் வீடு, வாகனம் மற்றும் பிற கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும்.ஒரு வருடம் முதல் அனைத்து கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களிலும் 0.10 சதவீதத்தையும் குறைப்பதாகப் பாங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.

பாங்க் ஆஃப் பரோடாவின் இந்த வட்டி விகித குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை ஃபிப்ரவரி மாதம் குறைத்தது. இதை அடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைப் பாங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது.வங்கிகள் வாரா கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ஆர்பிஐ வழங்கிய வட்டி விகித குறைப்பு நன்மையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியாத சூழலில் உள்ளன.

எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ் பாஸ்புக் வாங்க சிரமப்படவே வேண்டாம்! இதோ ஈஸி வழி.

முன்னதாக எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது. இப்போது பாங்க் ஆஃப் பரோடா குறைத்துள்ளது. விரைவில் பிற வங்கிகளும் வட்டி விகிதம் குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

Icici Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment