மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme SCSS) வட்டி வருவாய்: சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டு வரும் சூழலில், மூத்த குடிமக்கள் வட்டி குறைப்பால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்பதால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க எஸ்பிஐ ஆராய்ச்சி (SBI Research) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எங்கள் மதிப்பீடுகளின்படி நாட்டில் 4.1 கோடி மூத்த குடிமக்கள் தவனை வைப்பு கணக்குகள் உள்ளன. அவற்றின் மொத்த வைப்பு தொகை ரூபாய் 14 லட்சம் கோடி என எஸ்பிஐ ஆராய்ச்சி தனது சமீபத்திய ‘Ecowrap’ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனவே அரசு குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும் அரசு வட்டி விகிதத்தை 8.6 சதவிகிதம் என்பதிலிருந்து 7.4 சதவிகிதமாக குறைத்துள்ளது, 120 bps குறைவு.
இ.எம்.ஐ. கவலையை விடுங்க: முக்கிய வங்கிகள் லேட்டஸ்ட் அப்டேட் இங்கே!
சிறு சேமிப்பு திட்டங்களில் குறைப்பு என்பது கட்டாயமாகும் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சிறுசேமிப்பு விகிதங்கள் 10 -Year G-sec என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், சமீபத்திய வீத குறைப்புகள் வங்கி மற்றும் சிறு சேமிப்பு வீதங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை குறைக்கும்.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கி சேமிப்புகளை விட இன்னும் சிறப்பாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய பிறகும், மூத்த குடிமக்களுடைய வழக்கமான வருமானம் குறைவதால் வீத குறைப்புகள் மூத்த குடிமக்கள் சேமிப்புகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எஸ்பிஐ ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.
Disney+ Hotstar: ஐ.பி.எல்-லுக்கு வர்றதா சொன்னாங்க... வந்துட்டாங்க!
ரூபாய் 14 லட்சம் கோடி மொத்த வைப்புகளுடன் நாட்டில் சுமார் 4.1 கோடி மூத்த குடிமக்கள் கால வைப்பு கணக்குகள் உள்ளன என நாங்கள் கணக்கிட்டுள்ளோம். ஒரு கணக்கின் சராசரி வைப்பு அளவு சுமார் ரூபாய் 3.3 லட்சம் மேலும் இந்தவகை வைப்புகளின் வட்டி வருவாய் 5.5 சதவிகிதம் நிதியாண்டு 19 ல் தனியார் இறுதி நுகர்வு செலவு.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் ஒரு கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரை வைப்பு வைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”