ஓராண்டு எஃப்.டி-க்கு 7.35% வட்டி: இந்த 5 வங்கிகளை நோட் பண்ணுங்க!
ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு நல்ல ரிட்டன் கொடுக்கும் 5 வங்கிகள் குறித்து இதில் பார்க்கலாம். இதில் பேங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு 7.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு பலராலும் விரும்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஓராண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7.35 சதவீதம் வரை வட்டி வழங்கும் 5 வங்கிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
Advertisment
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு சாதாரண குடிமக்களுக்கு 6.7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதமும் வட்டி வழங்குகிறது. மற்றொறு தனியார் பேங்க் ஆன ஹெச்.டி.எஃப்.சி வங்கி வழக்கமான குடிமக்களுக்கு அதன் ஓராண்டு நிலையான வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 6.6 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.1 சதவிகிதம் வட்டியை வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கியை பொறுத்தமட்டில் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு மூத்தக் குடிமக்களுக்கு 7.6 சதவீதமும், சாதாரண குடிமக்களுக்கு 7.1 சதவீதமும் வட்டியை வழங்குகிறது. பேங்க் ஆஃப் பரோடாவின் வட்டி விகிதங்கள் சாதாரண குடிமக்களுக்கு 6.85 சதவீதம் ஆகவும், மூத்தக் குடிமக்களுக்கு 7.35 சதவீதம் ஆகவும் உள்ளன.
ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் வங்கிகளின் வட்டி விகிதங்கள்
வங்கி
வட்டி விகிதம் (%)
மூத்தக் குடிமக்கள் (%)
பேங்க் ஆஃப் பரோடா
6.85
7.35
கோடக் மஹிந்திரா வங்கி
7.1
7.60
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
6.8
7.3
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
6.7
7.2
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
6.6
7.10
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அண்மையில் தனது வட்டி விகிதங்களை திருத்தியது. புதிய வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விகிதங்களின்படி, பொதுமக்களுக்கு 6.8 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.